Thursday, 8 May 2014

அளவாக சிரித்து வளமோடு வாழ்வோம்.


.
மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம், கோபம், வெட்கம், பயம் போன்ற எத்தனையோ குணங்கள், மனிதன் குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்த வரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்குத் தொற்றிக் கொள்கிறது. பிறத்தல், மரணித்தல், அழுதல் போன்ற பண்புகள் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடி கொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்தத் தன்மையை இறைவன் மனிதனுக்கு மாத்திரம் பிரத்யேகமாக வழங்கியுள்ளான். மனிதனைத் தவிர்த்து ஆடு, மாடு, யானை, பூனை போன்ற ஏனைய உயிரினங்கள் சிரித்து நாம் பார்த்ததில்லை. எனவே தான் மனிதனுக்கு வரைவிலக்கணம் சொல்லும் போது, சிரிக்கும் உயிரினம் என்று விளக்கம் கொடுப்பார்கள்.

வாழ்வில் சிரமங்களையும் துயரங்களையும் சந்திக்கும் மனிதன் சிரிப்பின் மூலம் இவற்றை எளிதில் மறந்து விடுகிறான். அவனது மனதிற்கு சிரிப்பு, பிணி நீக்கும் சிரப்பாகத் திகழ்கிறது. எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருப்பவர்கள், செல்லும் இடமெல்லாம் நண்பர்களையும் அன்பர்களையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

இவர்களுடைய மகிழ்ச்சி இவர்களோடு மாத்திரம் நின்று விடாமல் பிறரையும் மகிழ்விக்க உதவுவதால் இவர்களைக் கண்டாலே மக்களுக்குக் குதூகலம் வந்து விடுகிறது. ஏனென்றால் சிரிப்பு என்பது ஒரு தொற்று நோயைப் போன்றதாகும். ஒரு சபையே சிரிப்பதற்கு ஒருவரது சிரிப்பு காரணமாகி விடுகிறது.

சிரிப்பினால் ஏற்படும் நன்மைகள்..



மனிதனோடு உடன் பிறந்த பல உணர்வுகளில் மிகவும் முக்கியமானது சிரிப்பு. ஒருவர் சிரிக்கும் பொழுது அவரது உடலில் ஆக்சிஜனேற்றம்
ஏற்படுகின்றது. நாம் ஒருமுறை சிரிக்கும் போது 300 தசைகள் அசைகின்றன.

சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 முறை சிரிக்க தயாராக உள்ளார்கள். ஆனால் அவர்களின் பெற்றோர் 15 முறை மட்டும் சிரிக்கின்றனர் என்பது ஓர் ஆய்வின் வெளிப்பாடு. வாழ்வின் ஒர் அங்கமாக இருந்த சிரிப்பை இன்று நாம் கடமைக்கு வரவழைத்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 (நன்றி: தினமணிக்கதிர் 20.7.2003).


இன்றைய நெருக்கடியான சூழலில், கடுமையான வார்த்தைப் பிரயோகத்தை மனிதன் விரும்புவதில்லை. மாறாக அதில் நகைச்சுவை கலந்திருப்பின் மனிதன் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறான்.

நோய் நிவாரணி

சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.

சிரிப்பும் அதற்கான வாய்ப்பும்


ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். (இனி மேல் வாழ்வில் சிரிக்கவே முடியாது என்பதனாலோ என்னவோ?) வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிரிப்பு என்பது பல வகை :

1. அசட்டு சிரிப்பு, 2. ஆணவச் சிரிப்பு,     3. ஏளனச் சிரிப்பு, 4. சாகச  சிரிப்பு, 5. நையாண்டிச்சிரிப்பு, 6. புன்சிரிப்பு   

இதில் புன்னகை என்பது அனைவராலும் வரவேற்கத்தக்க ஒரு வகையாகும். ஏனெனில் புன்னகை என்பது தன் மனது மகிழ்ச்சி அடையும் போது ஓசையின்றி முகத்தில் வெளிப்படும் அறிகுறியாகும்.

அந்த புன்னகை தான் பெருமான£ரின் வாழ்வின் அங்கமாக இருந்தது. தன்னுடைய எதிரியின் முகத்தில் கூட புன்னகையே பூத்தவர்கள் எம்பெருமான் நபி அவர்கள்.
 
அறிஞர்களின் பார்வையில்  சிரிப்பு

அழகின் சிரிப்பு என்றான் பாரதிதாசன்.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்றான் வள்ளுவநேசன்.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என்றான் கண்ணதாசன்.
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி... என்றான் பொதுவுடைமை கவிஞன்.
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு... என்றான் தமிழ் மூதறிஞன்.

நபி (ஸல்) அவர்களின் பார்வையில்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُكْثِرُوا الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா.(ரலி)

நூல் : இப்னுமாஜா  .4183

அறிஞர்களை படைத்தவன் வார்த்தை

فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ

எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.

அல்குர் ஆன். 9:82.

இறைவனின் சிரிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள் (எப்படி) முதலாமவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்)கொன்றவர் பாவமன்னிப்புக் கோர அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர் தியாகியாகி விடுகின்றார்.

ஆதாரம்: புகாரி எண் 2826.





*சிரிக்கும் தன்மையை மனிதனுக்கு இறைவன் தான் ஏற்படுத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சிரிப்பது ஒரு மோசமான செயல் என்றால் அத்தன்மையை ஏற்படுத்தியவன் நான் தான் என்று இறைவன் தன்னை புகழ்ந்து கூறியிருக்க மாட்டான்.

وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى

*அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.

அல்குர்ஆன் (53:43) *

அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.

 அல்குர்ஆன் (80:32)


நபியின் சிரிப்பு.

நபியவர்களை சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. வாய்விட்டு சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய்விட்டு சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்துகொள்ளலாம்.


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ               صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்கள்.
சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்துகொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர் ஆம் (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன் எடுத்துக்கொள் ஆதமின் மகனே உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்
(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி அல்லாஹ்வின் மீதாணையாக அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா

நூல் : புகாரி (2348)

عَنْ أَنَسٍ عَنْ ابْنِ مَسْعُودٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ فَهْوَ يَمْشِي مَرَّةً وَيَكْبُو مَرَّةً وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً فَإِذَا مَا جَاوَزَهَا الْتَفَتَ إِلَيْهَا فَقَالَ تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلِأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ابْنَ آدَمَ لَعَلِّي إِنَّ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِي غَيْرَهَا فَيَقُولُ لَا يَا رَبِّ وَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِيَ أَحْسَنُ مِنْ الْأُولَى فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَشْرَبَ مِنْ مَائِهَا وَأَسْتَظِلَّ بِظِلِّهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ آدَمَ أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا فَيَقُولُ لَعَلِّي إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِي غَيْرَهَا فَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِيَ أَحْسَنُ مِنْ الْأُولَيَيْنِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ آدَمَ أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا قَالَ بَلَى يَا رَبِّ هَذِهِ لَا أَسْأَلُكَ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهَا فَيُدْنِيهِ مِنْهَا فَإِذَا أَدْنَاهُ مِنْهَا فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْخِلْنِيهَا فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ فَضَحِكَ ابْنُ مَسْعُودٍ فَقَالَ أَلَا تَسْأَلُونِي مِمَّ أَضْحَكُ فَقَالُوا مِمَّ تَضْحَكُ قَالَ هَكَذَا ضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ قَالَ مِنْ ضِحْكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ فَيَقُولُ إِنِّي لَا أَسْتَهْزِئُ مِنْكَ وَلَكِنِّي عَلَى مَا أَشَاءُ قَادِرٌ

(நரகத்தி­ருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தை தாக்கி கரித்துவிடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன் சுபிட்டமிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர் என் இறைவா அந்த மரத்தின் அருகே என்னை கொண்டு செல்வாயாக. அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன். அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் மனிதா அதை உனக்கு நான் வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா? என்று கூறுவான். அதற்கு அவர் இல்லை இறைவா வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன் அவருக்கு வாய்ப்பளித்து அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார். அதன் நீரையும் பருகிக்கொள்வார்.
பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முத­ல் காட்டப்பட்ட மரத்தை விட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட உடன்) அவர் என் இறைவா இதற்கருகே என்னை கொண்டுசெல்வாயாக. நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துகொள்வேன். இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறுவார். மனிதா வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டு சென்றால் வேறொன்றை நீ கேட்ககூடுமல்லவா? என்பான். உடனே அவர் வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு வாய்ப்பளித்து அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக்கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.
பிறகு சொர்க்கவாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முத­ரண்டு மரங்களை விடவும் ரம்யமானதாக இருக்கும். உடனே அவர் என் இறைவா அந்த மரத்தின் அருகே என்னை கொண்டுசெல்வாயாக. நான் அதன் நிழலைப் பெறுவேன். அதன் நீரைப் பருகிக்கொள்வேன் என்று கூறுவார். இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறுவார். அதற்கு இறைவன் மனிதா வேறெதையும் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று கேட்பான். ஆம் என் இறைவா இந்தத் தடவை (மட்டும்). இனி இதன்றி வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து அதன் அருகே அவரைக் கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும் போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர் என் இறைவா சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக என்று கேட்பார். அதற்கு இறைவன் மனிதா ஏன் என்னிடம் கேட்பதை நீ நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அது போன்று இன்னொன்றையும் நான் உனக்கு வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே? என்று கேட்பான். அதற்கு அவர் என் இறைவா அகிலத்தின் அதிபதியே நீ என்னை பரிகாசம் செய்கிறாயா? என்று கேட்பார்.
(இதை அறிவித்த போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­) அவர்கள் இவ்வாறு தான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அதற்கு நபித்தோழர்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்று அந்த மனிதர் கூறும் போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்). மேலும் நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான் என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ்

நூல் : முஸ்லிம். 310

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَمَا أَهْلَكَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ قَالَ هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا قَالَ فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ ثُمَّ جَلَسَ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ تَصَدَّقْ بِهَذَا قَالَ أَفْقَرَ مِنَّا فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ رِوَايَةِ ابْنِ عُيَيْنَةَ وَقَالَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ وَهُوَ الزِّنْبِيلُ وَلَمْ يَذْكُرْ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்துவிட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்புவைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன் என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இருமாதம் நோன்பு நோற்க சக்தி இருக்கிறதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த (அரக்) என்னும் அளவைக் கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான் என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட என் பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக்கொடுத்து விடுவீராக என்றார்கள்.

நூல் : புகாரி   (1936

ஷைத்தானின் சிரிப்பு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّثَاؤُبُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ هَا ضَحِكَ الشَّيْطَانُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கொட்டாவி ஷைத்தானின் காரணமாக ஏற்படுகிறது. எனவே உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால் முடிந்த வரை தடுக்கட்டும். நிச்சயமாக ஷைத்தான் உங்களில் ஒருவருக்கு கொட்டாவி ஏற்பட்டு அதனால் ஹா என்று சொன்னால் அதைப்பார்த்து சிரிக்கிறான்.

நூல். புகாரி

நபியின் நகச்சுவையான பேச்சு

عَنْ أَنَسٍ
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْمِلْنِي قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ قَالَ وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் (4346)


عَنْ أَنَسٍ قَالَ
كَانَ لِأَبِي طَلْحَةَ ابْنٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَاحِكُهُ قَالَ فَرَآهُ حَزِينًا فَقَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ

நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி)  அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அவர் விளையாடிக்கொண்டிருந்த அவரது குருவி இறந்துவிட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (அபூ உமைரிடம்) அபூ உமைரே உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : அஹ்மத் (12389


 பொய் சொல்லி சிரிக்கவைக்கக் கூடாது

பிறரை சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாக சொல்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று..

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا قَالَ إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا

 (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

 நூல் : திர்மிதி 1913

حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالْحَدِيثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான்.

 நூல் : திர்மிதி 2237



பிறரை பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக்கூடாது

மற்றவர்களை பயமுறுத்தியோ ஏமாற்றியோ கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ
سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ جَادًّا وَلَا لَاعِبًا وَإِذَا وَجَدَ أَحَدُكُمْ عَصَا صَاحِبِهِ فَلْيَرْدُدْهَا عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும்.

நூல் : அஹ்மத் (17261)

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ
كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعَ فَضَحِكَ الْقَوْمُ فَقَالَ مَا يُضْحِكُكُمْ فَقَالُوا لَا إِلَّا أَنَّا أَخَذْنَا نَبْلَ هَذَا فَفَزِعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்­மை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்­முக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்)

நூல் : (ரஹ்) அஹ்மத் (21986)



6 comments: