Wednesday, 2 July 2014

நோன்பும் நோக்கமும்




இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு அல்லாஹ் இந்த உம்மத்துக்கு தந்த விலைமதிக்க முடியாத செல்வமாகும்.அதன் மூலம் ஒரு முஃமின் தன் உடல்,மற்றும் மனரீதியான வலிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

நோன்பின் மாண்புகள் பற்றியும்,சட்டங்கள் பற்றியும் சமுதாயம் நிறைய தெரிந்துவைத்திருக்கிறது.நோன்பு விஷயத்தில் நாம் தெரியவேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி உண்டு.அது என்னவெனில் அதன் நோக்கம்.

பொதுவாக அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட எந்த வணக்கமானாலும் அதற்கு நோக்கம் அவசியமாக இருக்கும்.காரணமின்றி காரியமாற்றச்சொல்லும் வழக்கம் அல்லாஹ்வுக்கு கிடையாது.அப்படிப்பார்க்கப்போனால் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னனியிலும் ஒரு அழுத்தமான காரணமுண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது.அதை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்.

நோன்பின் நோக்கம் தக்வா


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டவர்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு கடமயாக்கப்பது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.காரணம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக. என அல்லாஹ் கூறுகின்றான்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்,பொதுவாக  அல்லாஹ் ஒரு கடமையை செய்யச்சொல்லும்போது அதன் நோக்கத்தையோ அல்லது காரணத்தையோ குறிப்பிடமாட்டான்.

உதாரணமாக:

தொழுகை பற்றி- وَأَقِيمُوا الصَّلَاةَ
தொழுகையை நிலைநிறுத்துங்கள்.என்று மட்டுமே கூறுகின்றான்.ஏன் தொழவேண்டும்? அதனால் நமக்கு பயன் என்ன?அதன் நோக்கம் என்ன? என எதைப்பற்றியும் கூறவில்லை

ஜகாத் பற்றி-   آتُوا الزَّكَاةَ
ஜகாத் கொடுங்கள் என்று கூறுகின்றான்.

ஹஜ்,உம்ராவை பற்றி-  أَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّـهِ   
ஹஜ் உம்ராவை அல்லாஹ்வுக்காக பரிபூர்ணமாக நிறைவேற்றுங்கள் என்று கூறுகின்றான்.

குர்பானி பற்றி-  وَانْحَرْ
குர்பானி கொடுங்கள்.அவ்வளவுதான் கூறுகின்றான்.

தொழுகை,ஜகாத்,உம்ரா,ஹஜ்,குர்பானி போன்ற வணக்கவழிபாடுகளுக்கும் மகத்தான நோக்கங்கள் இருந்தாலும் அதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவாக கூறவில்லை.ஆனால் நோன்பை பற்றி கூறும்போது மட்டும் அதன் நோக்கத்தையும் இணைத்தே கூற காரணம் என்ன?

தொழுகை,ஜகாத்,ஹஜ் போன்ற அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் செய்வதற்கு தக்வா வேண்டும்.அந்த தக்வாவுக்கு நோன்பு வேண்டும்.அதாவது அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் தான் அமல் செய்யும் ஆர்வம் உண்டாகும்.அந்த அச்சம் உருவாக  நோன்பு ஒரு பயிற்சியாக அமைகின்றது.இந்த அடிப்படையில் நோன்பு என்பது உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல,மாறாக அது உள்ளத்துடன் விசேஷமான தொடர்புடையது.

அல்லாஹ்விடம் நோன்பின் மாண்பு


நோன்புக்கு கூலியாக அல்லாஹ் தன்னையே தருகிறான் என்றால் அதற்கு பொறுளில்லாமலில்லை.சாப்பிடாமல்,குடிக்காமல்,ஆசையின்றி இருப்பது அல்லாஹ்வின் தன்மையாகும்.அதனால் தான் அல்லாஹ்வுக்கு நோன்பை அவ்வளவு பிடிக்கும்.

நபி மூஸா அலை அவர்களிடம் அல்லாஹ் பேசுவதற்கான தகுதியாக 40 நாட்கள் நோன்பு நோற்கவேண்டும் என்று கூறினான்.

فلما هلك فرعون سأل موسى ربه الكتاب فامره بصوم ثلاثين وهو ذو القعدة بتمامه ليكلمه ويوحى اليه
பிர்அவ்னை அல்லாஹ் அழித்தபோது அல்லாஹ்விடம் நபி மூஸா அலை அவர்கள் வேதத்தை வேண்டினார்கள்.அதற்கு அல்லாஹ் நபி மூஸா அலை அவர்களை முபப்து நாட்கள் நோன்பு நோற்கச்சொன்னான்.அல்லாஹ்வுடன் பேசுவதற்கும்,வஹி அறிவிப்பதற்கும் அதுவே அவர்களுக்கு காரமானது


அவ்வாறு நபி ஈஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் சுவனத்தின் உணவை வேண்டியபோது அவர்களையும் நோன்பைக்கொண்டே ஏவினான்.

عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّهُ كَانَ يُحَدِّثُ عَنْ عِيسَى ابْنِ مَرْيَمَ أَنَّهُ قَالَ لِبَنِي إِسْرَائِيلَ: هَلْ لَكُمْ أَنْ تَصُومُوا لِلَّهِ ثَلَاثِينَ يَوْمًا، ثُمَّ تَسْأَلُوهُ فَيُعْطِيكُمْ مَا سَأَلْتُمْ؟ فَإِنَّ أَجْرَ الْعَامِلِ عَلَى مَنْ عَمِلَ لَهُ. فَفَعَلُوا
முப்பது தினங்கள் நோன்புவைத்து அல்லாஹ்விடம் கேளுங்கள்.நீங்கள் கேட்டதை அல்லாஹ் தருவான் என்று நபி ஈஸா அலை அவர்கள் பனீ இஸ்ரவேலர்களிடம் கூறினார்கள்.அவர்களும் அவ்வாறு செய்தனர்.
நாளை மறுமையில் அல்லாஹ் தன்னை சந்திப்பதற்கான அளவுகோளாக நோன்பையே தேர்வு செய்திருக்கின்றான்.

روى النسائي بإسناد صحيح عن أبي أمامة : " قلت : يا رسول الله مرني بأمر آخذه عنك ، قال : عليك بالصوم فإنه لا مثل له

எனக்கு ஒரு அமலை கற்றுத்தாருங்கள் என அபூ உமாமா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது நோன்பை பற்றிப்பிடியுங்கள்,அதற்கு நிகராக எந்த அமலும் இல்லை என்று கூறுகிறார்கள்.அதனால் தான் அந்த அமலுக்கு கூலி அல்லாஹ் தன்னையே தருகின்றான்.
.
நோன்பின் மாண்பை உணர்ந்த பெருமக்கள் நிலை:

وابن عساكر في تاريخ دمشق (31/196)عن محمد بن عبيد الله بن المنادي نا روح ابن عبادة نا العوام بن حوشب عن عياش العامري عن سعيد بن جبير قال لما حضر ابن عمر الموت قال ما آسى على شيء من الدنيا إلا على ثلاث ظمأ الهواجر ومكابدة الليل واني لم أقاتل هذه الفئة الباغية التي نزلت بنا يعني الحجاج

நான் இந்த துன்யாவில் மூன்று விஷயங்கள் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றேன்.மற்றபடி இந்த துன்யாவை பிரிவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் தங்களின் மரண தருவாயில் கூறினார்கள்
1.கடுமையான வெப்பகாலத்தில் நோன்பு நோற்பது
2.இன்பமான இரவு வணக்கம்
3.அழிச்சாட்டியம் செய்யும் ஹஜ்ஜாஜ் படையுடன் போர் செய்யாமல் விட்டது

لما احتضرت السيدة نفيسة وهي صائمة ألزموها الفطر
فقالت : واعجباه لي منذ ثلاثين سنة أسأل الله أن ألقاه وأنا صائمة أفأفطر الآن ، هذا لا يكون.
ثم أنشدت تقول :
اصرفوا عني طبيـبي :: ودعوني وحبيــــبي
زاد شوقـي إليـه :: وغرامي ونحيــــبي
...ثم ابتدأت بسورة الأنعام فلما وصلت إلى قوله تعالى : ( لَهُمْ دارُ السَّلامِ عِنْدَ رَبِّهِمْ )
( الأنعام : 127 ) فاضت روحها الطاهرة الى ربها

ஹஸன் ரலி அவர்களின் மகள் நபீஸா ரஹ் அம்மையாரின் மரண நேரம் நெருங்கியபோது நோன்புவைத்திருந்த அவர்களை நோன்பை விடச்சொல்லி அவர்களின் மக்கள் வற்புறுத்துகின்றனர்.அதை மறுத்த அந்த அம்மா- நான் நோன்பாளியாகவே மரணிக்க வேண்டும் என அல்லாஹ்விடம் 30 ஆண்டுகள் துஆச்செய்துவருகின்றேன்.இந்த நேரத்திலா நோன்பை திறப்பேன்? தபீபை (மருத்துவர்) அனுப்பி விடுங்கள்.நான் ஹபீபை (அல்லாஹ்) சந்திக்கவேண்டும் என்று கூறி சூரா அன்ஆமை ஓத ஆரம்பித்தார்கள்.
( لَهُمْ دارُ السَّلامِ عِنْدَ رَبِّهِمْஎன்ற வசனம் ஓதியபோது அவர்களின் உயிர் பிரிந்தது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

نزل الحَجَّاج في بعض أسفاره بماء بين مكة والمدينة، فدعا بغدائه، ورأى أعرابيًّا، فدعاه إلى الغداء معه، فقال:
"دعاني من هو خير منك فأجبته"، قال: "ومن هو؟"، قال: "الله -تعالى- دعاني إلى الصيام فصمتُ"، قال: "في هذا الحر الشديد؟"،
قال: "نعم، صمتُ ليوم أشد منه حرًّا"، قال: "فأفطر وصم غدًا"، قال: "إن ضمنت لي البقاء إلى غد"، قال: "ليس ذلك إليَّ"،
قال: "فكيف تسألني عاجلاً بآجل لا تقدر عليه؟
"
ஹஜ்ஜாஜ் தன் பயணத்தின் நடுவே மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடைப்பட்ட பூமியில் சிறிதுநேரம் ஓய்வெடுக்க தங்கினார்.அப்போது சாப்பிடுவதற்கு உணவை கொண்டுவரச்சொன்னார்.மேலும் தன்னுடன் சேர்ந்து உணவு உண்ண அங்கிருந்த ஒரு கிராமவாசியையும் அழைக்கிறார்.
அந்த கிராமவாசியோ, உங்களை விட சிறந்தவனின் அழைப்புக்கு நான் ஏற்கனவே  பதில் சொல்லிவிட்டேன் என்று கூறினார்.யார் அவர்?என ஹஜ்ஜாஜ் கேட்டபோது அல்லாஹ் என்று அக்கிராமவாசி கூறினார்.ஆம்! அல்லாஹ்வின் அழைப்பான நோன்புக்கு நான் பதில் சொல்லி நோன்புவைத்தி ருக்கின்றேன் என்றார்.
இந்த கடிமையான வெயில்காலத்திலா?என ஹஜ்ஜாஜ் ஆச்சரியப்பட்டு கேட்டார்.ஆம் இதைவிடவும் கடுமையான நரக வெப்பத்திலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள நோன்பு நோற்றுள்ளேன் என்றார்.
சரி பரவாயில்லை.இப்போது நோன்பு திறந்துகொள்.நாளை நோன்பு நோற்றுக்கொள் என்று ஹஜ்ஜாஜ் கூறியபோது-நாளை வரை என் ஹயாத்துக்கு நீர் பொறுப்பெடுப்பீரா?என அந்த கிராமவாசி கேட்டார்.அதற்கு ஹஜ்ஜாஜ் என் அதிகாரத்தில் இல்லாத விஷயத்திற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கேட்டாராம்.

நோன்பு கண்மூடித்தனமான வழிபாடு


எல்லா வகையிலும் நோன்பு மற்ற அமல்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குவதை பார்க்க முடிகிறது.
நோன்பு உடனடியாக அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் தன்மைக்கு பயிற்சி தருகிறது.
தொழுகை என்றால் நின்றல்,ருகூவு செய்தல், ஸஜ்தா செய்தல், உட்காருதல் குரான் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற செயல்களை குறிக்கும்.

ஜகாத் என்றால் பொருளை கொடுத்தல்.
ஹஜ் என்றால் தவாப் செய்தல், ஸயீ செய்தல், ரம்யி செய்தல்,தங்குதல் போன்ற செயலை குறிக்கும்.இந்த வரிசையில் நோன்பு என்றால் செய்வதல்ல,விடுவது.அல்லாஹ்வுக்காக ஹராமை விடுவல்ல,ஹலாலையே விடுவது.
ஹலாலை ஏன் விடவேண்டும்? தெரியாது.என் ரப்பு சொன்னான். நான் செய்கிறேன் எனும் அடிமை உணர்வை நோன்பு மேலோ
ங்கச்செய்கிறது

ஸவ்ம் என்ற அரபி வார்த்தைக்கு பொருளே விடுவது என்பதுதான். உணவை குடிபானத்தை இச்சையை விடுவதற்கு நோன்பு என்று சொல்லப்படுகின்றது.ஒரு செயலை செய்தை விட பழக்கமாகிப்போன ஒன்றை விடுவது மிகவும் கஷ்டமான காரியமாகும்.
ஆயிரம் இரக்கஅத்தை ஒருவனை தொழச்சொன்னால் தொழுதுவிடுவான்.   அவனிடம் ஊறிப்போன ஒரு தீயபழக்கத்தை விடச்சொல்லிப்பாருங்கள்.அதனால் தான் பாவங்களை விட்டுப்பாருங்கள் நீங்களே பெரும் வணக்கசாலி என்று பெருமானார் ஸல் அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் பயிற்சியை நோன்பு பயிற்றுவிக்கிறது,ஸஹாபாக்கள் தங்களின் வாழ்வில் இந்த உயரத்தை அடைந்ததற்கு காரணம் அந்த உயர்ந்த குணம்தான்.

لما نزل قول الله تعالى: فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ المائدة: من الآية91قال عمر رضي الله عنه: "انتهينا انتهينا". .
ولما نادى المنادي في المدينة: ألا إن الخمر قد حرمت، سارع الناس إلى جرار الخمر في بيوتهم فكسروها، وأراقوا ما بقي منها حتى جرت في سكك المدينة وطرقاتها كل ذلك مسارعة منهم في الإذعان للوحي وأمر السماء كما في صحيح البخاري

மது ஹராமாக்கப்பட்ட வசனம் இறங்கியபோது மது ஹராமாக்கப்பட்டு விட்டது என்று ஒரு அழைப்பாளரின் சப்தம் கேட்டு மக்கள் தங்களின் வீடுகளில் வைத்திருந்த மது பாத்திரங்களை உடைத்தார்கள்.மீதமிருந்த மதுவை மதீனாவின் வீதிகளில் கொட்டினார்கள்.மதீனாவே மது ஆறாக ஓடியது
يقول أنس رضي الله عنه : أمرَ رسولُ الله صلى الله عليه وسلم مناديا ينادي ألا أن الخمر قد حرمت ، فقال لي أبو طلحة : أخرج فأنظر ما هذا الصوت .؟ فخرجت فقلت : هذا منادٍ ينادي : ألا إن الخمر قد حرمت ، فقال لي : اذهب فأهرقها ، قال أنس : فجرت في سكك المدينة

அந்த அழைப்பாளைரின் சப்தம் கேட்ட மதுக்கடை உரிமையாளர் அபூதல்ஹா ரலி அவர்கள் அங்கு வேலைப்பார்த்த என்னிடம் அது என்ன சப்தம் என்று பார்க்கச்சொன்னார்கள்.
நான் வந்து விஷயத்தை எடுத்துரைத்தபோது எதுவும் பேசாமல் அத்துனை மதுவையும் கீழே கொட்டிவிடு என்று எனக்கு உத்தரவிட்டார்கள் என ஹழ்ரத் அனஸ் ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.
காலம் காலமாக அடிமைப்பட்டுப்போன ஒரு பழக்கத்தை அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக உடனடியாக கட்டுப்படுகிறார்கள் என்றால் இது தான் தீன்.இதை அந்த நபித்தோழர்கள் எங்கிருந்து கற்றுக்கொண்டார்கள்.?இந்த பயிற்சியை நோன்பு நம்க்கு வழங்குகிறது.

روى البخاري ومسلم عن عبد الله بن عمر رضي الله عنه قال : بينما الناس في قُباء في صلاةِ الصبح إذْ جاءهم آتٍ فقال : إن رسول الله صلى الله عليه وسلم قد أُنزل عليه الليلةَ قرآنٌ ، وقد أُمر أن يستقبل الكعبة فاستقبِلوها ، وكانت وجُوههم إلى الشام قِبَلَ المقدس [ وهذه القبلة عباد الله هي عكس القبلةِ الحالية ] قال : فاستداروا إلى الكعبة أثناء صلاتهم

குபாவில் மக்கள் பஜ்ர் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர்.அந்த நேரம் ஒரு அழைப்பாளர்-நபி ஸல் அவர்களுக்கு நேற்றிரவு வஹி இறங்கி  து, அதில் கஃபாவாக கிப்லா மாற்றப்பட்டுவிட்டது.எனவே கஃபாவை நோக்கி திரும்புங்கள் என்று சப்தம் கேட்டு, அப்போது பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதுகொண்டிருந்த மொத்த கூட்டமும் அதற்கு நேர் எதிர் திசையான கஃபாவை நோக்கி தொழுகையில் திரும்பினார்கள்.
வந்தவர் யார்?செய்தி உண்மைதானா?அப்படியே உண்மையாக இருந்தாலும் அடுத்த வக்திலிருந்து மாறிக்கொள்ளலாம் என்றெல்லாம் யோசிக்காமல் உஅடனடியாக அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படும் இந்த பண்பே ஸஹாபாக்களை முழு உலகமும் திரும்பி பார்க்க வைத்தது.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فَخَلَعَ نَعْلَيْهِ ، فَخَلَعَ النَّاسُ نِعَالَهُمْ ، فَلَمَّا انْصَرَفَ , قَالَ : " لِمَ خَلَعْتُمْ نِعَالَكُمْ ؟ " , قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، رَأَيْنَاكَ خَلَعْتَ فَخَلَعْنَا ، قَالَ : " إِنَّ جَبْرَائِيلَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ بِهِمَا خَبَثًا ، فَإِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقْلِبْ نَعْلَيْهِ فَلْيَنْظُرْ فِيهِمَا خَبَثٌ ، فَإِنْ وَجَدَ فِيهِمَا خَبَثًا فَلْيَمْسَحْهُمَا بِالأَرْضِ ، ثُمَّ لِيُصَلِّ فِيهِمَا
மக்களுக்கு தொழவைத்திருந்த நபி ஸல் அவர்கள் திடீரென தங்களின் செருப்புகளை கழட்டினார்கள்.மக்களும் உடனடியாக தங்களின் செருப்பை தொழுகையில் கழட்டிவிட்டார்கள்.
தொழுகையை நிறைவு செய்த ஸல் அவர்கள் மக்களை நோக்கி, நீங்கள் உங்கள் செருப்பை கழட்டினீர்கள்?என கேட்டார்கள்.அதற்கு, நாயகமே! தாங்கள் செருப்பை கழட்டக்கண்டோம்,எனவே நாங்களும்கழட்டினோம்.என்று கூறினர்.  அப்போது நபி ஸல் அவர்கள்  உங்கள் செருப்பில் நஜீஸ் உள்ளது அதை கழட்டிவிட்டு தொழுகையை தொடருங்கள் என ஜிப்ரயீல் அலை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என கூறினார்கள்.

فعن جابر بن سليم أنه قال لرسول الله صلى الله عليه وسلم: "اعهد إلي"، فقال له: (لا تسبن أحداً)، قال: "فما سببت بعده حراً ولا عبداً ولا بعيراً ولا شاة

எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள் என்று ஜாபிர் ரலி அவர்கள்நபி ஸல் அவர்களிடம் வேண்டிக்கொண்டபோது யாரையும் திட்டாதே என்று ஒரே வரியில் சொன்னார்கள்.
அன்றுமுதல் சுதந்திரமானவர்,அடிமை, ஒட்டகம், ஆடு எதையும் நான் திட்டுவதில்லை என ஜாபிர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

موقف ابن عمر رضي الله عنه فإنه حين بلغه حديث النبي عليه الصلاة والسلام: (ما حق امرئ مسلم له شيء يوصي فيه، يبيت ثلاث ليال إلا ووصيته عنده مكتوبة)، قال: "فما مرت علي ليلة منذ سمعت رسول الله صلى الله عليه وسلم قال ذلك إلا وعندي وصيتي

ஒரு முஸ்லிமின் வாழ்வில் வஸிய்யத் எழுதிவைக்காமல் மூன்று தினங்கள் கூட கடக்க வேண்டாம் என நபி ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டது முதல் உடனடியாக நான் வஸிய்யத் எழுதிவைத்தேன் என இப்னு உமர் அரலி அவர்கள் கூறுகிறார்கள்.

ذكر الحميدي أنه كان عند الشافعي، قال: "فأتاه رجل فسأله عن مسألة، فقال الشافعي: قضى فيها رسول الله صلى الله عليه وسلم كذا وكذا، فقال رجل للشافعي: وما تقول أنت؟ فقال الشافعي: سبحان الله!، تراني في كنيسة، تراني في بيعة –أي دار عبادة اليهود-، ترى على وسطي زناراً –وهو شعار أهل الذمة-، أقول لك قضى رسول الله صلى الله عليه وسلم وأنت تقول: ما تقول أنت" .
يعني: ماذا عساي أن أقول بعد قول الله وقول رسوله، لا يوجد لأحد قول، ولا يقدم عليهما كلام إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ النور:51.

இமாம் ஷாபிஈ ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து ஒரு மஸ்அலா கேட்டார்.  இந்த மஸாஅலாவில் நபி ஸல் அவர்கள் இவ்வாறு தீர்ப்புச்செய்தார்கள் என இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கூறினார்கள்.அதைக்கேட்ட அந்த மனிதர் சரி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?என கேட்டார்.                          கடுமையாக கோபம்கொண்ட இமாம் அவர்கள் என்னை என்ன யூத பாதிரி என்றா எண்ணிக்கொண்டாய்.நான் என்ன ஆலயத்தில் உட்கார்ந்தா உனக்கு தீர்ப்புச்செய்கின்றேன்?அல்லாஹ் ரஸூலின் சொல்லுக்கு கட்டுப்படுவதை தவிர ஒரு முஃமினுக்கு வேறு என்ன இருக்கிறது?என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதினார்கள்
إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّـهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் "நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்" என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்

4 comments: