Monday 28 July 2014

யா அல்லாஹ்!அமலை தந்தாய்,அங்கீகாரம் தா



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாத நோன்பை  நோற்று, அதனை பூரணப்படுத்தி நோன்பு பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட இருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உஸ்மானிகள் பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

முஸ்லிம்கள் தம்மிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை கடந்து ஒற்றுமை, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்றைய தினத்தில் யூத,கிருத்துவ,இணைவைப்புச்சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக கைகோர்த்து காஸாவில் களமிறங்கியிருக்கிறது.அதேசமயம் அல்லாஹ்வின் போராளிகளுக்கு முன் மண்டியிட்ட காட்சியையும் நாம் கண்டு வருகின்றோம்,.அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாம் வெற்றி பெற்று நம் முதல் கிப்லாவை மீட்கும் காலம் வெகுதூரம் இல்லை என்பதை மட்டும் இப்போதைய நற்செய்தியாக முஸ்லிம் உம்மத் எடுத்துக்கொண்டு இத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

இஸ்லாம் வாகை சூடும் அந்த பொன்னாளை தள்ளி போடலாம்,ஒருகாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இன்ஷா அல்லாஹ் இனி இஸ்லாம் வெல்லும் என்ற நற்செய்தியை இப்பெருநாள் வாழ்த்தாக கூறிக்கொள்கிறோம்.

உலக நாடுகளிலும் உள்நாட்டிலும்நோய்,வறுமை,சிறைவாழ்க்கை,அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களினால் துன்பத்திலும் துயரத்திலும் அல்லல்படும் முஸ்லிம்களின் வாழ்வு நலம் பெற இப்பெருநாள் தினத்தில் துஆச்செய்யுமாறு பேரவை உங்களை கேட்டுக்கொள்கிறது.ஏனெனில் பலஸ்தீனில்மட்டுமன்றி அரபுலக நாடுகளிலும் வாழும் பல முஸ்லிம்கள், ஆட்சியாளர்களினாலும், கிளர்ச்சிகளினாலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
اللهم لا تسلط علينا من لا يخافك و لا يرحمنا
யா அல்லாஹ்!உன்னை அஞ்சாத, எங்கள் மீது இறக்கம் காட்டாத ஆட்சியாளர்களை எங்களின் மீது சாட்டிவிடாதே! ஆமீன்

இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தையும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி கொண்டது.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லிம்கள் ஒன்று கூடுகின்றனர்

புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.

அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.                     
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيدٌ
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன் உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அல்லாஹ்வின் அளவிலா கருணையாலும் நிகரில்லா கிருபையாலும் ரமலான் மாதத்தை அடைந்து கொண்டோம்.அமல் செய்தோம்.
அமலுக்கான கூலியை எதிர்நோக்கி இருக்கிற இந்த நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி மனமுருகி கேட்கவேண்டிய ஒன்று உண்டு.

அது அமலுக்கான அங்கீகாரம்!

ஒவ்வொரு இபாதத்தின் முடிவிலும் கபூலிய்யத்தின் கவலை வேண்டும்.நாம் செய்யும் வணக்கத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையானால் வணக்கம் பயனற்றுப்போய்விடும்.

அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான் ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.

ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ் விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.
ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.

அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சிலநேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம்.தாகித்த நாயிக்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத்தந்தது.

அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?
இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ

"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று (ஹாபீல்) கூறினார்.
அச்சமுள்ளவருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள இவ்வசனம் ஒன்றே போதுமானது.அதனால் தான் நபிமார்கள்,ஸஹாபாக்கள் ஸாலிஹீன்கள் ஒரு அமலை துவக்கும்போதும் முடிக்கும்போது அல்லாஹ் ஏற்றுக்கொள்வதை கேட்பார்கள்.

عَنْ وُهَيْبِ بْنِ الْوَرْدِ، قَالَ: قَرَأَ { وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا }  زَادَ ابْنُ خُنَيْسٍ فِي حَدِيثِهِ، ثُمَّ يَبْكِي، فَقَالَ وُهَيْبٌ: يَا خَلِيلَ الرَّحْمَنِ تَرْفَعُ قَوَائِمَ بَيْتِ الرَّحْمَنِ وَأَنْتَ مُشْفِقٌ أَنْ لا يَقْبَلَ مِنْكَ"
அல்லாஹ்வின் நண்பரே!பைத்துல்லாஹ்வின் பணியை துவக்கும்போதே கபூலிய்யத்தை கேட்டீர்களே! என ஹழ்ரத் வுஹைப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن رجب : في ( لطائف المعارف 323 ) : بعض السلف كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم شهر رمضان ثم يدعون الله ستة أشهر أن يتقبله
ஸலபிய்யீன்களில் சிலர் ஆறுமாதம் ரமலானை அடைவதை கேட்பார்கள்.ரமலானை அடுத்த ஆறுமாதம் ரமலானின் கபூலிய்யத்தை கேட்பார்கள் என இப்னு ரஜப் கூறுகிறார்

خرج عمر بن عبد العزيز رحمه الله في يوم عيد فطر فقال في خطبته : أيها الناس إنكم 
صمتم لله ثلاثين يوما و قمتم ثلاثين ليلة وخرجتم اليوم تطلبون من الله أن يتقبل منكم

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் தங்களின் ஈது கொத்பாவில் மக்களே!நீங்கள் முப்பது நாள் பகல் காலத்தில் நோன்பு நோற்றீர்கள் இரவு காலத்தில் நின்று வணக்கம் செய்தீர்கள்.இப்போது அல்லாஹ்விடம் அது அங்கீகரிக்கப்படவேண்டும் என துஆ வேண்டி வந்துள்ளீர்கள் என கூறுவார்களாம்.

قال علي -رضي الله عنه-: "كونوا لقبول العمل أشدّ اهتمامًا منكم بالعمل

அமல்கள் செய்வதைவிடவும் அது அதுகபூலாக வேண்டும் என்ற கவலையை அதிகமாக்குங்கள் என அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


قال سلمة بن دينار -رحمه الله-: "الخوف على العمل أن لا يُتقبّل أشد من العمل

அமலைவிடவும் அங்கீகரிக்கப்படும் விஷயத்தில் அதிகமாக பயப்பட வேண்டும் என சல்மா இப்னு தீனார் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்
ரமலானை மட்டும் வணக்கவழிபாடுகளால் அழங்கரித்தவர்கள் பற்றி ஸாலிஹீன்களான நல்லோர்களிடம் வினவப்பட்டபோது
அவர்கள் அல்லாஹ்வை ரமலானில் மட்டும் அறிந்துகொண்டார்கள் என்று கூறினர்.

كما قال بعضهم: ثواب الحسنة الحسنة بعدها. كما أن من عمل حسنة ثم أتبعها بسيئة كان ذلك علامة على رد الحسنة التي عملها وعدم قبولها.

ஒரு நன்மையை தொடர்ந்து நன்மை செய்வதே அந்த முதல் நன்மைக்கான கூலியாகும்.அதைப்போலவே ஒரு நன்மையை தொடர்ந்து பாவம் செய்வது அந்த நன்மை ரத்து செய்யப்பட்டுவிட்டது,மேலும் அது கபூல் இல்லை என்பதற்கான அடையாளமாகும் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ما تكلم أهل العلم عن معنى قول النبي -عليه الصلاة والسلام-: "الحج المبرور ليس له جزاء إلا الجنة"، قالوا: والحج المبرور هو الذي يكون حاله بعد الحج خيرا من حاله قبل الحج، يعني في صلاته وعبادته ولسانه وسلوكه، وهذا من علامات قَبول الحج.

மப்ரூரான ஹஜ்ஜிக்கான கூலி சுவனத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்ற ஹதீஸின் விரிவுரையில் முஹத்திஸீன்கள் கூறும்போது-
ஹஜ்ஜுக்கு பின் உள்ள வாழ்க்கை ஹஜ்ஜுக்கு முன் உள்ள வாழ்வை விடவும் வணக்க வழிபாடுகள் அதிகமானால் அதுவே ஹஜ் மப்ரூரான அடையாளமாகும் என்று கூறுகின்றனர்.

كذلك من علامات قبول الصيام أن يؤثر رمضان فيك، وإن كنت خلال رمضان امتنعت عن مشاهد أشياء محرمة فينبغي أن تستمر على ذلك بعد رمضان، وإن كنت خلال رمضان تشهد صلاة الفجر في المسجد فينبغي ان تستمر عل هذا العمل الصالح بعد رمضان.
அவ்வாறு நோன்பு கபூலான அடையாலம் என்ன வெனில் ரமலான் உன் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.உதாரணமாக ரமலானில் ஹராம் விஷயத்தில் கவனமாக பேனுதலாக இருந்தாய்.அதேநிலை ரமலான் அல்லாத காலத்திலும் தொடரவேண்டும்
ரமலானில் பஜ்ர் தொழுகையை விடவில்லை.அதைப்போலவே ரமலான் அல்லாத காலத்திலும் பஜ்ரை தவறவிடாமல் தொடர்ந்தால் ரமலான் கபூலிய்யத்தின் அடையாளமாகும்.
ரமலான் காலத்தில் வித்ரு மற்றும் இரவுத்தொழுகையில் மிகுந்த பேனுதலை கடைபிடித்து வந்தோம்.
இன்ஷா அல்லாஹ் மற்ற காலத்திலும் தஹஜ்ஜுத் மற்றும் வித்ரில் அதே நிலையை பேணவேண்டும்.

وقال -صلى الله عليه وسلم-: "لا يحافظ على الوتر إلا مؤمن وعليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة إلى ربكم وإن قيام الليل مطردة للداء عن الجسد".
ஒரு முஃமின் வித்ர் தொழுகையில் பேணுதலை கடைபிடிக்க வேண்டும். இன்னும் இரவுத்தொழுகையையும் வழமையாக்குங்கள்,ஏனெனில் அது உங்களின் முன்னோர்களான நல்லோர்களின் வழமையாகும்.உங்களின் இறைவன் பக்கம் உங்களை நெருக்கமாக்கி வைக்கும்.மேலும் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வை தரும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

புனிதமிக்க ரமலான் மூன்று வகையான முஃமின்களை பார்த்திருக்கிறது.

முதலாவது:இவர்கள் ரமலானுக்கும் முன்னும் வணக்காசாளிகள்.ரமலானையும் வணக்கத்தில் கழித்தவர்கள்.ரமலானுக்கு பின் இன்னும் அதிகமாக தங்களை வணக்கத்தில் ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இரண்டாவது:இவர்கள் ரமலானுக்கு முன் வணக்கம் செய்ய மாட்டார்கள். ஆனால் ரமலானை பயனுள்ள இபாதத்தில் கழிப்பவர்கள்.ரமலான் இவர்களை விடைபெற்று விட்டால் தங்களின் அமலுக்கும் விடை கொடுத்துவிடுவார்கள் இப்படிப்பட்டவர்கள் பற்றியே நான் கூறிய முதல் வசனம் எச்சரிக்கிறது.
சுருக்கமாகச்சொன்னால் இவர்கள் ரமலானை தந்த ரப்பை வணங்காமல் ரமலானை வணங்கிய கூட்டம்.

மூன்றாவது:இவர்களுக்கு ரமலானும் ரமலான் அல்லாத காலமும் ஒன்றே.   எந்த வித்தியாசமுமின்றி பாவத்தில் தங்கள் வாழ்வை கழிப்பவர்கள்.இப்படிப்பட்டவர்கள் படுநாசத்திற்குறியவர்கள் என ஹதீஸ்களில் எச்சரிக்கை வந்துள்ளது.
ரமலான் தந்த முத்தான படிப்பினை என்னவெனில் நம் விருப்பம், ஆசை,நோக்கம் அனைத்தையும் விட அல்லாஹ்வின் விருப்பத்தை தேர்வு செய்வது.இதுவே ரமலான் தந்த பாடமாகும்.
முதல் உதாரணம்....
عمران بن حصين -رضي الله عنه-، الصحابي الجليل الذي شارك مع النبي -صلى الله عليه وسلم- في جميع غزواته، فلما توفي النبي -صلى الله عليه وسلم- أصابه شلل نصفي فرقد على ظهره ثلاثين عامًا حتى توفي وهو لا يتحرك، تخيلوا -أيها الناس- ذلك؟! ثلاثون عامًا وهو -رضي الله عنه- نائم على ظهره لا يتحرك، لدرجة أنهم نقبوا له في السرير، أي: جعلوا فيه فتحة ليقضي حاجته لأنه لا يستطيع الحركة، فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه، أشهدكم أني راضٍ عن ربي الصحابة الصحابة
இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் நாயகத்துடன் பல போர்களில் கலந்து கொண்டவர்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் கடுமயான வாத நோய் தாக்கப்பட்டு 30 வருடம் படுக்கை வாழ்க்கை.சுய தேவைகள் கூட படுத்தநிலையில் தான்.உடலை அசைக்க கூடமுடியாத கடுமையான நோய்.அப்போது அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன்,அவன் திருப்திபட்ட்தை நான் திருப்திபட்டுவிட்டேன்.என்று சொன்னதுடன்,நீங்கள் என்னை இந்த நிலையில் காண்கிறீர்,ஆனால் நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்,அவர்களை சந்திக்கிறேன் என்றும் கூறினார்கள்

வரலாற்றில் இன்னொரு உதாரணம்.....

தாபியீன்களில் முக்கியமான மூன்று நபர்கள் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது மூவரும் துஆச் செய்தனர்.
ஒருவர்: فقال الشعبي: "اللهم إني أسألك أن أموت قريبًا
யா அல்லாஹ்! சீக்கிரத்தில் எனக்கு மரணத்தை கொடு!காரணம் கேட்கப்பட்டது? குழப்பமான காலத்திலிருந்து ஈமானை பாதுகாக்கவே அப்படி துஆச்செய்தேன் என்றார்.

இரண்டாமவர்: سعيد بن المسيب.      اللهم أحيني طويلاً!
யாஅல்லாஹ்! எனக்கு நீண்ட ஆயுளை கொடு.காரணம் கேட்டபோது நிறைய அமல் செய்ய வேண்டும் என்றார்கள்

மூன்றாமவர் :   اللهم لا أختار لنفسي؛ فاختر أنت ما شئت
எனக்காக எதையும் நான் கேட்கமாட்டேன்,நீ விரும்பியதை எனக்கு கொடு அதுவே எனக்கு நன்மையாக அமையும் என்றார்கள்.இதை கேட்ட அவ்விருவரும்      أنت أفضلنا  எங்களில் நீயே சிறந்தவர் என்றார்கள்.
அல்லாஹ்வின் விருப்பத்தையே தன் விருப்பமாக மாற்றுகிற இந்த பண்பையே ஈதுல் பித்ர் நமக்கு போதிக்கிறது என்று கூறி இந்த நாளைப்போல என்றும் எப்போதும் முஸ்லிம்களின் வாழ்வை அல்லாஹ் மகிழ்ச்சியாக்கி வைப்பானாக !ஆமீன்.

No comments:

Post a Comment