Thursday, 17 July 2014

சொர்க்கத்தில் தடம்பதிப்போம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான உஸ்மானிகள் ஆன்லைன் வாசகர்களுக்கு.......

இத்தளத்தில் வாராந்திர ஜும்ஆ பதிவிடும் பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் உஸ்மானியால் தொடர்ந்து பதிவிட முடியாததால்  மிகுந்த நேர நெருக்கடி மற்றும் அலுவல்களுக்கிடையிலும் மீண்டும் அந்த பொறுப்பை நாங்களே எடுக்கின்றோம்.உங்களின் மேலான துஆவிற்காக
                                                                                                                                       

இப்படிக்கு:
                      மெளலவி ஹயாத் கான் உஸ்மானி
                       மெளலவி காஜாஹுஸைன் உஸ்மானி

நரக விடுதலையையும் சுவனத்தின் பிரவேசிப்பையும் அல்லாஹ்விடம் வேண்டுவதற்காக நமக்கு விஷேசமாக தரப்பட்டிருக்கின்ற ரமளானின் இறுதிபத்து நாட்களில் நாம் அல்லாஹ்விடம் சொர்க்கத்தை அதிகமாக கேட்பதுடன் அதை நமக்கு சொந்தமாக்கி தருகிற அமல்களையும் உன்னத குணங்களையும் ரமளானின் பரகத்தாலும் அது தந்த முதிர்ந்த பக்குவத்தாலும் வாழ்க்கையில் கொண்டுவந்தால் சுவனம் நமக்கு எட்டும் தூரம்தான் இதை கவனத்தில் கொண்டு இந்த தலைப்பை நாம் சிந்திப்போம்.

சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் அமல்கள்.

عن أنس رضي الله عنه، قال: قال رجل، يا رسول الله، ما ثمن الجنة؟ قال:
لا إله إلا الله.

நபியிடம் ஒரு மனிதர் சுவனத்தின் விலை என்ன ? என்று கேட்டார்  அதற்கு நபி (ஸல்) அவர்கள் லாயிலாஹா இல்லல்லாஹ் தான் அதனுடைய விலை என்றார்கள்.

நூல். மூஜிபாத்துல் ஜன்னத்.
عن ابن عمر -رضي الله عنهما-، عن رسول الله صلى الله عليه وسلم، قال: ((من قال كل يومٍ مئة مرةٍ: لا إله إلا الله الملك الحق المبين، كان له أنسٌ في وحشة القبر، واستجلب الغنى، واستقرع باب الجنة، وأمن بها من وحشة القبر)).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்த மனிதன் ஒரு நாளைக்கு 100 தடவை : لا إله إلا الله الملك الحق المبين   என்று கூறுவானோ அது அவனுக்கு தனிமையான கப்ருடைய வெறுப்பில் மகிழ்ச்சியை கொடுக்கும் செல்வத்தை வசப்படுத்தும் சொர்க்கத்தின் வாசலை தட்டும்.
நூல். மூஜிபாத்துல் ஜன்னத்.

عن أنس بن مالك رضي الله عنه، قال: كان رجل من الأنصار يؤمهم في مسجد قباء، فكان كلما افتتح سورة يقرأ لهم بها في الصلاة مما يقرأ به افتتح بـ {قل هو الله أحدٌ}، حتى يفرغ منها، ويقرأ سورة أخرى معها، فكان يصنع ذلك في كل ركعة، وكلمه أصحابه، فقالوا، إنك تفتتح بهذه السورة، ثم لا ترى أنها مجزيتك، حتى تقرأ بأخرى، فإما أن تقرأ بها، وإما أن تدعها، وتقرأ بأخرى، فقال، ما أنا بتاركها، فإن أحببتم أن أؤمكم بذلك فعلت، وإن كرهتم تركتكم، وكانوا يرون أنه أفضلهم، وكرهوا أن يؤمهم غيره، فلما أتوا النبي صلى الله عليه وسلم أخبروه الخبر، فقال النبي صلى الله عليه وسلم:
((يا فلان، ما يمنعك أن تفعل ما يأمرك أصحابك، وما يحملك على لزوم هذه السورة في كل ركعةٍ))، فقال: يا رسول الله، إني أحبها، فقال النبي صلى الله عليه وسلم: ((حبها أدخلك الجنة)).

அனஸ் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.
    
 அன்சாரிகளில் ஒருவர் மஸ்ஜிதே குபாவில் இமாமாக இருந்தார் அவர் தொழுகையில் ஒவ்வொரு ரகத்திலும் பாத்திஹாவுக்கு பிறகு சூரத்துல் இக்லாஸை ஆரம்பிப்பார் அதற்குப் பின் துணை சூராவை ஓதுவார் அவரிடம் அந்த மஹல்லாவாசிகள்  இது விஷயமாக பேசுகின்றபொழுது சொன்னார்கள் நீங்கள் சூரத்து இக்லாஸை ஓதுகின்றீர்கள் பிறகு துணை சூரா ஓதுகின்றீர்கள் இப்படி செய்ய வேண்டியது இல்லை நீங்கள் இக்லாஸை மட்டும் ஓதுங்கள் அல்லது அதை விட்டு விட்டு துணை சூரா மட்டும் ஓதுங்கள் என்றார்கள் அந்த இமாம் சொன்னார் இந்த செய்லை நான் விடுபவனாக இல்லை நீங்கள் விரும்பினால் நான் இதே நிலையில் இமாமத் செய்வேன் நீங்கள் வெறுத்தால் நான் உங்களை விட்டும் விலகி கொள்கின்றேன் என்றார் அந்த மக்கள் அவரை மிகச் சிறந்த இமாமாக பார்த்தார்கள் எனவே இவர்கள் அல்லாத வேறு ஒருவர் தங்களுக்கு இமாமாக இருப்பதை வெறுத்தார்கள் எனவே இந்த விஷயத்தை நபி இடம் சொன்னார்கள் நாயகம் அந்த சஹாபி இடம் உங்கள் தோழர்கள் சொல்வதை செய்வதை விட்டும் உங்களை தடுத்தது எது? ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா இக்லாஸை பற்றி பிடிக்க காரணம் என்ன என்று கேட்டார்கள் அவர் சொன்னார் நான் அந்த சூராவை பிரியப்படுகின்றேன் நாயகம் சொன்னார்கள் அந்த பிரியம் உன்னை சொர்க்கத்தில் நுழைக்கும் என்றார்கள் சூரா இக்லாஸை தொழுகையில் தான் ஒத வேண்டும் என்று கட்டாயம் இல்லை தொழுகைக்கு வெளியில் அதை ஒதினாலும் சொர்க்கம் கிடைக்கும்.

நூல். துர்ரத்துல் மன்ஸூர்.


சுவனத்தை சுவைக்கச் செய்யும் பாக்கியங்களும் பண்புகளும்.

 وعن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو هكذا " وضم أصابعه . رواه مسلم

நாயகம்(ஸல்) சொன்னார்கள் எந்த மனிதன் இரண்டு பெண் மக்களை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை ஒழுக்கத்துடன் பேணி வளர்த்தாரோ அவரும் நானும் இந்த இரு விரல்களைப் போன்று கியாமத்தில் சேர்ந்திருப்போம் என்றார்கள்.

நூல். முஸ்லிம்

فقد روي أنه رئي في المنام فقيل له: ما فعل الله بك؟ فقال: رفعت منازلي في الجنة وأشرف بي على مقامات الأنبياء ولم أبلغ منازل المتأهلين. وفي رواية قال لي: ما كنت أحب أن تلقاني عزباً قال: فقلنا له، ما فعل أبو نصر التمار؟ فقال: رفع فوقي بسبعين درجة، قلنا: بماذا فقد كنا نراك فوقه؟ قال: بصبره على بنياته والعيال

பிஷ்ரு இப்னு ஹாரிஸ் அவர்களும் அபூநஸ்ரு அவர்களும் சமகாலத்தில் இறை நேசர்களாவார்கள்
அந்த இருவருமே மரணித்தார்கள் பிஷ்ரு அவர்களை சிலர் கனவில் கண்டார்கள் அவர்களிடம் அல்லாஹ் உங்களை என்ன செய்தான் என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னார்கள் சுவனத்தில் எனது அந்தஸ்து உயர்த்தப்பட்டது இன்னும் சொர்க்கத்தில் நபிமார்களின் இடங்களையும் எனக்கு காண்பித்தான் ஆனாலும் சுவனத்தில் உள்ள குடும்பஸ்தர்களின் அந்தஸ்தை நான் அடையவில்லை இன்னும் இறைவன் சொன்னான் நீங்கள் திருமணம் செய்யாமல் என்னை சந்திப்பதை நான் விரும்பவில்லை என்றான் கனவில் கண்டவர்கள் கேட்டார்கள் அபூநஸ்ரு என்ன செய்கிறார் பிஷ்ரு சொன்னார்கள் அவருக்கு என்னை விடவும் 70 மடங்கு அந்தஸ்து சுவனத்தில் உயர்த்தப்பட்டது காரணம் என்னவெனில் அவர் திருமணம் செய்து மனைவி மக்களுடன் பொருமையை மேற்கொண்டதால் இந்த பாக்கியம் கிடைத்தது என்றார்கள்..

நூல். இஹ்யா.

وقال أبو الدرداء: قلت يا رسول الله دلني على عمل يدخلني الجنة، قال: " لا تغضب
அபூ தர்தா (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் என்னை சுவனத்தில் நுழையச் செய்யும் அமலை பற்றி கேட்ட பொழுது அவர்கள் நீ கோபப்படாதே உனக்கு சொர்க்கம் உண்டு என்றார்கள்.

நூல். இஹ்யா

மன்னிப்பதில் மாண்பு பெற்ற மாநபியின் தோழர்கள்..

وجلس ابن مسعود في السوق يبتاع طعاماً فابتاع ثم طلب الدراهم وكانت في عمامته فوجدها قد حلت فقال لقد جلست وإنها لمعي، فجعلوا يدعون على من أخذها ويقولون: اللهم اقطع يد السارق الذي أخذها اللهم افعل به كذا، فقال عبد الله: اللهم إن كان حمله على أخذها فبارك له فيها وإن كان حملته جراءة على الذنب فاجعله آخر ذنوبه.

அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் பஜாரில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக அமர்ந்திருந்தார்கள் அதை வாங்கி விட்டு தன் தலைப்பாகையில் இருந்த காசை தேடினார் அவர்களின் தலைப்பாகை அவிழ்க்கப்பட்டிருந்தது அவர்களுடம் இருந்தவர்கள் காசை திருடியவனை சபித்தார்கள் இறைவா திருடனின் கையை துண்டித்து விடு இன்ன இன்ன சோதனையை கொடு என்றார்கள் ஆனால் இப்னு மஸ்ஊத் இப்படி துஆ செய்தார்கள் காசை எடுத்தவன் தன்னுடைய ஹலாலான தேவைக்கு எடுத்திருந்தால் அவனுக்கு அதில் பரக்கத் செய்..   பாவத்தின் துணிச்சல் இதிலே அவனை தூண்டி இருந்தால் இந்த பாவத்தை அவனுடைய கடைசி பாவமாக ஆக்கி விடு ஹிதாயத்தை வழங்கு.. 
 
நூல்இஹ்யா ..

விசாரனை இன்றி சொர்க்கம் செல்லும் பாக்கிய சாலிகள்.

عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده قال : قال رسول الله صلى الله عليه وسلم : « إذا جمع الله الخلائق يوم القيامة ، نادى مناد : أين أهل الفضل ؟ فيقوم ناس وهم يسير ، فينطلقون إلى الجنة سراعا ، فتتلوهم الملائكة ، فيقولون : إنا رأيناكم سراعا إلى الجنة ، فمن أنتم ؟ فيقولون : نحن أهل الفضل . فيقولون : وما فضلكم ؟ فيقولون : كنا إذ ظلمنا صبرنا ، وإذا أسيء إلينا عفونا ، وإذا جهل علينا حلمنا . فيقال لهم : ادخلوا الجنة ، فنعم أجر العاملين . قال : ثم ينادي مناد : أين أهل الصبر ؟ فيقوم ناس وهم يسير ، فينطلقون إلى الجنة سراعا قال : فيتلقوهم الملائكة ، فيقولون : إنا نراكم سراعا إلى الجنة ، من أنتم ؟ فيقولون : نحن أهل الصبر . فيقولون : وما صبركم ؟ فيقولون : كنا نصبر على طاعة الله ، وكنا نصبر عن معاصي الله . فيقال لهم : ادخلوا الجنة فنعم أجر العاملين .

மறுமையில் ஒரு அழைப்பாளர் உங்களில் சிறப்பிற்குரியவர்கள் யார்என்று கேட்பார் ஒரு கூட்டம் எழுந்து நிற்பார்கள் அவர்களிடம் நீங்கள் சொர்க்கம் செல்லுங்கள் என்று சொல்லப்படும் அவர்கள் கேள்வி கணக்குக்கு முன்பாகவே சொர்க்கம் செல்வார்கள் மலக்குகள் அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்பார்கள் நாங்கள் சிறப்பிற்குரியவர்கள் என்று கூறுவார்கள் மலக்குகள் உங்களின் சிறப்பு என்ன என்று கேட்பார்கள் நாங்கள் உலகில் வாழ்ந்த பொழுது எங்களுக்கு செய்யப்பட்ட அநீதிகளை பொறுத்துக் கொண்டோம் எங்களுக்கு செய்யப்பட்ட தீங்குகளை மன்னித்து விட்டோம் என்று கூறுவார்கள் மலக்குகள் அவர்களிடம் நீங்கள் சுவனம் செல்லுங்கள் அமல் செய்தவர்களின் கூலி நல்லதாகி விட்டது
 பிறகு ஒரு அழைப்பாளர் பொறுமை சாலிகள் எழுந்து நிற்கட்டும் என்று சொல்வார்கள் ஒரு சிறிய கூட்டம் எழுந்து நிற்பார்கள் அவர்களிடம் சுவனம் செல்லுங்கள் என்று கூறப்படும் அவர்கள் சுவனத்தை நோக்கி போவார்கள் மலக்குகளிடம் அவர்கள் நாங்கள் தான் பொறுமைசாலிகள் என்று கூறுவார்கள் உங்களின் பொறுமை எப்படி இருந்த்து என்று மலக்குகள் கேட்பார்கள் அவர்கள் சொல்வார்கள் நாங்கள் அல்லாவை வணங்குவதின் மீது பொறுமையாக இருந்தோம் அல்லாவுக்கு மாறு செய்வதை புறக்கணித்து பொறுமையுடன் வாழ்ந்தோம் அந்த மக்களிடம் நீங்கள் சொர்க்கம் செல்லுங்கள் என்று கூறப்படும்..

நூல். தப்ரானி
              
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

கியாமத் நாளில் ஒரு அழைப்பாளர் மக்களில் சங்கையானவர்கள் யார் நீங்கள் இப்போது அறிந்துகொள்வீர்கள் என்று கூறிவிட்டு உலகில் இன்பம் துன்பம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை புகழ்ந்தவர் எழுந்து நிற்கட்டும் என்று சொல்வார் அந்த மக்கள் விரைந்து சொர்க்கம் செல்வார்கள். இவர்களைப்போன்றே தஹஜ்ஜத் தொழுதவர்களும் இன்னும் யாரை அவர்களின் வியாபாரம் கொடுக்கல் வாங்கள் தொழுகையை விட்டும் திக்ரை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் பாராமுகமாக ஆக்கவில்லையோ அவர்களும் விசாரணை இன்றி சொர்க்கம் செல்வார்கள்..

நூல்.துர்ருல் மன்ஸூர்

عن عائشة).
اعتكاف عشر في رمضان كحجتين وعمرتين

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த மனிதர் ரமளானின் கடைசி 10 நாட்கள் இஃதிகாப் இருப்பாரோ அவருக்கு இரண்டு ஹஜ் இரண்டு உம்ரா செய்த நன்மையை தருகின்றான்.

நூல். கன்சுல் உம்மால்.

عن أنس قال : كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان فلم يعتكف عاما . فلما كان العام المقبل اعتكف عشرين . رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் கடைசி 10 நாட்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள் அவர்கள் மரணித்த வருடத்தில் 20 நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

நூல். திர்மிதி

من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.

யார் ஈமானுடனும் நன்மையை நாடியும் இஃதிகாப் இருப்பாரோ அவருடைய கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படும்.
நூல். கன்சுல் உம்மால்.

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பு.

ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه . ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه "

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த மனிதன் ஈமானுடனும் நன்மையை நாடியும் லைலத்துல் கத்ரு இரவில் வணங்கினாரோ அவருடைய கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படும்.

நூல். முஸ்லிம்.

லைலத்துல் கத்ரு இரவில் ஜிப்ரீல் (அலை) அவர்களின் தொடர்பை பெற..

عن علي).
من فطر صائما في رمضان على طعام وشراب من كسب حلال صلت عليه الملائكة في ساعات شهر رمضان وصلى عليه جبريل ليلة القدر

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமளானில் ஹலாலான பணத்தில் இருந்து நோன்பாளிக்கு யார் நோன்பு திறக்க உணவு வழங்குவாரோ அவர்மீது ரமளானில் இரவு காலம் முழுவதும் மலக்குகள் துஆ செய்கின்றார்கள். லைலத்துல் கத்ரு இரவில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவருடன் முஸாபஹா செய்வார்கள். யாரிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஸாபஹா செய்வாரோ அவருடைய இதயம் மென்மையாகி கண்ணீர் அதிகமாகும்.

நூல். தைலமி

நபித்தோழர் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் எந்த இரவில் லைலத்துல் கத்ரை ஆதரவு வைக்கின்றார்களோ அந்த இரவில் 4000 மதிப்பில் வாங்கிய ஆடையை அனிந்து வணங்குபவர்களாக இருந்தார்கள்.

நூல். துர்ருல் மன்ஸூர்..

وعن عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان " . رواه البخاري

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமளானின் கடைசி 10 நாட்களில் ஒற்றை படையில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்
.
நூல். தப்ரானி

1 comment:

  1. ஒரே உங்க கூத்து தாங்க முடியலப்பா

    ReplyDelete