செப்டம்பர்
5 ஆசிரியர் தினம்
மனித வாழ்க்கையின் அந்தஸ்த்தை தீர்மானிப்பது
அவன் கற்றிருக்கும் கல்வியும்
பெற்றிருக்கும் நல் ஒழுக்கமும். இவ்விரண்டையும் கொண்டு அவன்
அடைந்திருக்கும் செல்வமும்தான் வாழ்க்கையின்
மகிழ்ச்சிக்கு தேவையான இந்த மூன்றையும் கொண்டு வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாலும் சங்கை மிக்க ஆசிரியர்களின் கடும் உழைப்பும் தியாகமும்
மறைந்திருக்கின்றது. அந்த ஆசிரியர்களை
நன்றியுடன் நினைவு
கூறும் நன்னாள் தான் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5
ம் தேதி.
1962 முதல் இந்த நாள் நம் நாட்டின் முதல்
ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணண் அவர்களின்
பிறந்த நாளை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
மனதின்
கறைகளை களையும் கலைஞர்கள்.
ஆசிரியர் 'ஆசு' என்றால் குற்றம் என்று பொருள். சிரியர்
என்றால் நீக்குபவர் என்று
பொருள். எனவே
ஆசிரியர் என்றால் குற்றங்களை நீக்குபவர் என்று அர்த்தமாகும்.
வளம்
மிக்க நாட்டை உருவாக்கும் நலன் மிக்க ஆசிரியர்கள்.
கல்வியிலும் எழுத்தறிவிலும் கேரளத்தை பின்
தள்ளிவிட்டு முதல் மாநிலமாக திரிபுரா
உயர்ந்துள்ளது. 2001 ல் எழுத்தறிவில் நாட்டில் 12
வது இடத்தில்
இருந்த அம்மாநிலம் 2013 ல் 94 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
காரணம் என்னவெனில் 85 ஆசிரியர்களின் தலைமையில் 8 ஆயிரம் தன்னார்வ தொன்னடர்களின் உதவியுடன் மாநில முழுவதும் கல்விப் பயணம்
செய்து மக்களுக்கு கல்வி புகட்டி
இந்த சாதனையை
புரிந்துள்ளனர் –
ஆதாரம் தினமணி - 09.09.2013.
நன்றி
செலுத்வோம் நம் ஆசிரியர்களுக்கு .
அலி (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
எவர் எனக்கு ஒரு எழுத்தை கற்றுக் கொடுத்தாரோ அவருக்கு நான் அடிமையாக இருக்கின்றேன். அவர் நாடினால் என்னை விலைக்கு விற்கலாம், விரும்பினால் உரிமைவிடலாம், அவர் நினைத்தால் தனது பணிவிடைக்காக என்னை அடிமையாக வைத்து கொள்ளலாம்.
நூல். தஃலிமுல்
முதஅல்லிம்.
2009 செப்டம்பர் 4 ம் தேதி ராசிபுரம் அருகே
வண்டிப்பாளையம்
என்ற ஊரில் வெங்கட்ராமன் என்ற ஆசிரியருக்கு 11
லட்சம் செலவில் அவரின் முன்னாள் மாணவர்கள் வீடு
கட்டி கொடுத்துள்ளனர்.
وقال أحمد بن حنبل رضي الله عنه: ما صليت صلاة منذ أربعين سنة إلا وأنا أدعو
للشافعي رحمه الله تعالى
சட்ட மேதை இமாம் ஷாபியின் மாணவர் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள். நாற்பது ஆண்டுகளாக நான்
ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் என்
ஆசிரியர் ஷாபிஈ
(ரஹ்) அவர்களுக்கு துஆ செய்து வருகின்றேன். எந்த தொழுகையிலும் துஆ செய்யாமல் விட்டதில்லை.
நூல். இஹ்யா உலூமுத்தீன்.
அறம்
போதித்த ஆசிரியர்களுக்கு அரணாக இருப்போம்.
உலகின் பல நாடுகளையும் ஆட்சி புரிந்த மாவீரன்
அலெக்சாண்டர் தனது ஆசிரியர்
சாக்ரடீஸ்
அவர்களுடன் பயணித்த போது இடையில் ஒரு நதி குறுக்கிட்டது. அதனுடைய ஆழம் தெரியாமல் இருவரும் தவித்தப் பொழுது
அலெக்சாண்டர் தாமதம் இல்லாமல்
ஆற்றில் இறங்கி
ஆழம் குறைவு தான் என்பதை அறிந்து கொண்டு தன் ஆசான் சாக்ரடீஸ் அவர்களை அழைத்துச் சென்றான். அப்பொழுது சாக்ரடீஸ் அலெக்சாண்டரிடம் வயதில் குறைந்த வாழ
வேண்டிய நீ வேகமாக நதியில் இறங்கினாயே
அது ஆபத்தில்லையா ? நான் இறங்கி பார்த்திருப்பேனே நீ ஏன் முந்தி கொண்டாய் என்று கேட்ட பொழுது அலெக்சாண்டர் சொன்னார். நான் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி ஒருவேளை இறந்து விட்டால் அது
ஒன்றும் இவ்வுலகத்திற்கு இழப்பு அல்ல
அது என்னுடன்
முடிந்து போகும். ஆனால் உங்கள் உயிர் விலை மதிப்பற்றது நீங்கள் வாழ வேண்டும் ஏனெனில் நீங்கள் என் போன்ற ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்க சக்தி பெற்றவர்கள் என்று சொல்லி
காட்டினான்.
மரியாதை
செய் மரியாதை செய்யப்படுவாய்.
இமாம் பக்ருத்தீன் அல் அர்ஸா பந்தி அவர்கள்
மர்வா என்ற இடத்தில் வாழ்ந்தவர் அவரை
அந்த ஊரின்
இஸ்லாமிய ஆட்சியாளர் மிகவும் கண்ணியப்படுத்தக் கூடியவராக இருந்தார். அவர்கள் சொன்னார்கள். நான் எனது ஆசிரியர் அபாயசீத் அத் தபூசி (ரஹ்) அவர்களுக்கு பணிவிடை செய்யக் கூடியவனாகவும், சமையல் செய்யக் கூடியவனாகவும் இருந்தேன். அந்த பணி
விடையை கொண்டும், அவர்களுக்கு நான் செய்த கண்ணியத்தை கொண்டு தான்,
இந்த அந்தஸ்த்தை
பெற்றேன் என்றார்கள்.
நூல்.தஃலிமுல் முத அல்லிம்
நூல்.தஃலிமுல் முத அல்லிம்
روى أن أبا حنيفة قال: ما مددت رجلي نحو دار أستاذي حماد؛ إجلالاً له. وكان بين داره وداره سبع سِكك.
இமாம் அபூ ஹனிபா
(ரஹ்) அவர்கள் சொன்னார்கள். நான் எனது ஆசிரியர் ஹம்மாத்
(ரஹ்) அவர்கள் மீது கொண்ட
கண்ணியத்தின்
காரணமாக நான் அவர்களின் வீட்டு திசையை நோக்கி எனது கால்களை நீட்டியதில்லை என்றார்கள். இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் வீட்டுக்கும் அவரின் ஆசிரியரின் வீட்டுக்கும் இடையில் 7 தெருக்கள் இடைவெளி இருந்தது.
நூல். الطبقات السنية
நல்ல
மாணவர்களிடம் நன் மதிப்பை பெற்றவர்களே நல் ஆசிரியர்கள்.
فقال أحمد: يا بني كان الشافعي رحمه الله تعالى كالشمس للدنيا
وكالعافية للناس
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் தன மகனிடம் என் ஆசிரியர்
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் உலகத்திற்கு சூரியன் போன்றும்
மக்களுக்கு ஆரோக்கியத்தை போன்றும் இருந்தார்கள் என்றார்கள்.
நூல். இஹ்யா
முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம் அவர்கள் ராமநாதபுரம்
ஸ்வார்ட்ஸ் உயர்
நிலை பள்ளியில் படித்த பொழுது தனக்கு பாடம் போதித்த ஆசிரியர் அய்யாதுரை சாலமன் பற்றி இப்படி சொல்கிறார் 'நான் தன் நம்பிக்கையுடனும், விடா முயற்ச்சியுடனும் உழைத்து சாதிக்க காரணமாக இருந்தவர் என் ஆசிரியர் தான் என்றார்.
ஆசிரியர்களுக்கு
அல்லாஹ் தந்த மரியாதை.
وقال الشعبي: حدثني
فروَة بن نوفل الأشجعي قال: قال ابن مسعود: إن معاذًا كان أمة قانتا لله حنيفا،
فقلت في نفسي: غلط أبو عبد الرحمن، إنما قال الله: { إِنَّ إِبْرَاهِيمَ كَانَ
أُمَّةً } فقال: أتدري ما الأمة وما القانت؟ قلت: الله [ورسوله] (3) أعلم. قال:
الأمة الذي يعلم [الناس] (4) الخير. والقانت: المطيع لله ورسوله. وكذلك كان معاذ
معلم الخير. وكان مطيعا لله ورسوله.
மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் நான் இப்னு மஸ்வூது (ரலி ) அவர்களிடம் இபுராஹீம் (அலை) அவர்கள் தொடர்பான இந்த
வசனத்தை ஓதிக் காட்டினேன்.
அப்பொழுது அவர்கள்
சொன்னார்கள். மூஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களும் உம்மத்தாகவும், கானித்தாகவும் இருந்தார் என்றார் மேலும்
உம்மத்திற்கு இப்னு மஸ்வூது அவர்கள் விளக்கம் சொன்னார்கள். 'உம்மத்' என்றால் மக்களுக்கு நல்ல செய்திகள் போதிக்க கூடியவர். 'கானித்' என்றால் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் வழிபடக் கூடியவர் என்று
பொருளாகும்.
மக்களுக்கு
நல்லவற்றை போதித்த 'இப்ராஹிம் (அலை) அவர்கள் அல்லாஹ் அவர்
ஒருவரே ஒரு சமுதாயம்' என்று சொல்கிறான்.
நூல். தப்ஸீர் குர்துபி
ஆசிரியர்களின்
மரியாதையை குறித்து அகிலத்தின் ஆசிரியர் அண்ணலார் நாயகம் (ஸல்) அவர்கள்
சொன்னார்கள் .
وقال صلى الله عليه وسلم " إن الله سبحانه وملائكته وأهل سمواته
وأرضه حتى النملة في جحرها حتى الحوت في البحر ليصلون على معلم الناس الخير
நிச்சயமாக
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் வானத்தில் உள்ளோரும் பூமியில் உள்ளோரும் பொந்தில்
வாழும் எறும்பும், கடலில் உள்ள மீன்களும் மக்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்களுக்கு பாவ மன்னிப்பு தேடுகின்றார்கள்.
நூல். இஹ்யா
நல்ல
மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பாகும்
கல்வி வணிகமாகிவிட்ட இக்காலத்தில் சேவைக்காக
படிக்காமல், தன் உலக தேவைக்காக மக்கள் கல்வியை நாடுகிற இந்த சூழ்நிலையில் இந்த போக்கு மாற வேண்டுமானால் நிச்சயமாக ஆசிரிய பெருமக்கள்
மாணவர்களுக்கு சேவையின் சிறப்பையும் நல்அறம் செய்வதின் அருமையையும் உணர்த்த வேண்டும்.
وعن أبي
الدرداء قال : قال رسول الله صلى الله عليه وسلم
: " ألا أخبركم
بأفضل من درجة الصيام والصدقة والصلاة ؟ " قلنا : بلى . قال : " إصلاح
ذات البين وفساد ذات البين هي الحالقة " . رواه أبو داود والترمذي وقال : هذا
حديث صحيح
நோன்பு தொழுகை
தர்மம் இவைகளில் கிடைக்கும் அந்தஸ்தை விடவும் மேலான காரியத்தை உங்களுக்கு 'நான் அறிவித்து தர வேண்டாமா? என்று சொல்லிவிட்டு சொன்னார்கள். பிரிந்து வாழும்
இருவருக்கும் இடையில் இணக்கத்தை உண்டாக்குவது தான் அது. இருவருக்கும் இடையில் குழப்பத்தை உருவாக்குவது தீனை சிதைப்பதாக இருக்கும் என்றார்கள்.
நூல். அபூதாவுத்
« عن أبي هريرة رضي الله عنه قال : » قلت يا
رسول الله : إذا رأيتك طابت نفسي وقرت عيني فأنبئني عن كل شيء ، قال : كل شيء خلق
من ماء . قلت : انبئني عن أمر إذا عملت به دخلت الجنة : قال : إفْشِ السلام وأطعم
الطعام وصل الأرحام وقم بالليل والناس نيام ثم أدخل الجنة بسلام « .
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் சொல்கின்றார்கள் நான் நபி
(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின்
தூதரே உங்களை பார்த்தால் எனது உள்ளம்
நிம்மதி பெறுகிறது எனது கண் குளிர்ச்சி அடைகிறது
எல்லா விஷயங்கள் பற்றியும் எனக்கு
அறிவியுங்கள் என்ற
பொழுது (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எல்லா வஸ்த்துக்களும் தண்ணீரில் இருந்து தான் படைக்கப் பட்டது. மேலும் நான் நபி இடம் சொர்க்கத்தில் நுழைவதற்கு ஒரு அமலை
அறிவித்து தாருங்கள் என்ற பொழுது, நாயகம் சொன்னார்கள் உணவு அளியுங்கள், சலாமை பரப்புங்கள், உறவை சேர்த்து வாழுங்கள், மக்கள் உறங்கும் போது இரவில் நின்று
வணங்குங்கள். நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள் என்றார்கள்.
நூல். துர்ருல்
மன்ஸூர்.
أيوب الأنصاري رضي
الله عنه قال : جاء رحل إلى النبي صلى الله عليه وسلم فقال : عظني وأوجز . فقال :
" إذا قمت في صلاتك فصل صلاة مودع ولا تكلم بكلام تعذر منه غدا وأجمع الإياس مما في أيدي الناس "
ஒரு மனிதர் நபி
(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு
சுருக்கமாக
உபதேசம் செய்யுங்கள் அப்பொழுது அவர்கள் சொன்னார்கள் நீ தொழுகின்ற ஒவ்வொரு தொழுகையையும் தொழும் பொழுது இந்த தொழுகையுடன் உலகத்தை விட்டு விடைபெற போவதாக எண்ணிக்கொண்டு தொழுவீராக! நாளைக்கு பிறரிடம் மன்னிப்பு கேட்கும் படியான பேச்சை யாரை பார்த்தும் பேசாதே. மக்களின் கையில் உள்ளதை பெறுவதை விட்டும் நிராசை ஆகி விடு
என்றார்கள்.
நூல் : மிஷ்காத்.
மாணவர்களின்
புதிய புதிய ஆய்வுகளை, கண்டுபிடிப்புகளை ஆசிரியர்கள்
வரவேற்று உற்சாகபடுத்த வேண்டும்.
عَنْ رِفَاعَةَ
بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ قَالَ
كُنَّا نُصَلِّي
يَوْمًا وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا
رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ
وَقَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا لَكَ
الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ الْمُتَكَلِّمُ آنِفًا قَالَ
الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا
يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلًا
ரிபாஆ (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.
நாங்கள் நபி (ஸல்)
அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்பொழுது பின்னால் நின்ற ஒரு
மனிதர் رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا
كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا
فِيهِ என்று
சொன்னார் . தொழுது முடித்து நாயகம் ஸல்) அவர்கள் சற்று நேரத்திற்கு முன் தொழுகையில் புதிதாக ஒரு
வார்த்தையை பேசியவர் யார் என்று
கேட்டார்கள். ஒரு சஹாபி நான் தான் அதை சொன்னேன்
என்றார் அதை கேட்ட நாயகம்
ஸல்) அவர்கள்
சொன்னார்கள் 30 மலக்குகள் அதனுடைய நன்மையை யார் முதலில் எழுதுவது என்று போட்டி போட்டதை நான்
கண்டேன் என்றார்கள் .
நூல். முஸ்னத் அஹ்மத்.
பள்ளி கூடத்தில்
நமக்கு பாடம் போதித்தவர்கள் மாத்திரம் ஆசிரியர்கள் அல்ல
மாறாக நாம் செய்யும் தொழிலை, ஈடுபட்டிருக்கும் பணியை நமக்கு சொல்லி தந்தவரும், நாம் அறிந்திருக்கும் விஷயங்களில் ஒரு நல்ல விஷயத்தை நமக்கு
கற்று தந்தவரும் நமக்கு ஒருவகையில் நமக்கு
ஆசிரியர் தான். என்பதை இந்த நாளில்
உணர்ந்து வாழ்க்கையில்
நாம் உயர்வதற்கு, உழைத்த,
பாடுபட்ட
அனைவரோடும் என்றும் நாம் நன்றி உணர்வுடன் வாழ்வோம் .
Masha ALLAH arumaiyana thalaipu
ReplyDeleteArputhamaana thagavalhal jazakallah
جزاك الله خيرا كثيرا
ReplyDeleteகாலத்திற்கு தோதுவான அருமையான தலைப்பு ....ஜஸாகல்லாஹ் ....
ReplyDeleteAllahummagfirlee valivaalidhayya vali usthadhee.......
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் நல்ல அற்புதமான காலத்திற்கு தோதுவான தலைப்பு
ReplyDeleteமிக மிக மிக ஆருமயைமானய தலைப்பு
ReplyDeleteMasha allah
ReplyDeleteIDAYIL SILA VAARAM YEN BAYAN PODALA
ReplyDeleteAlhamdulliah arumy
ReplyDeleteAndha vagayil perumaanaar namakku migapperiya aasiriyar
ReplyDeletealhamthulillaah
ReplyDeleteஇந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாந்த் என்பது திருத்தம் செய்ய வேண்டும்
ReplyDelete