|
அல்லாஹ்வால்
நமக்கு வழங்கப்பட்டுள்ள செல்வம்
செல்வாக்கு ஆரோக்கியம் அழகு அறிவு நிம்மதி இவைகளும் இவைகள் போன்று மற்ற நற்பாக்கியங்களும் நமக்கு
பூரணமாகவும் நிறைவாகவும் கிடைக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் இந்த விருப்பத்தில்
குற்றம் இல்லை ஆனால் இதே போன்று நமது ஈமான் முழுமை அடையவும்
நாம் ஆசைப்படவேண்டும்.
அவ்வாறு ஆசைபடுபவர்களுக்கு இருக்க
வேண்டிய குணம் குறித்து நாயகம் சொன்னார்கள் நாம் யாரைபிரியப்பட்டலும்
வெறுத்தாலும் அதனுடைய நோக்கம் அல்லாஹ்வாக இருக்கவேண்டும் என்றார்கள்.
ஆனால் இன்றும் மக்களிடம் நிலவி வருகிற ஒரு தீயகுணம் என்ன வென்றால்
எவரிடத்தில் பணமும் பதவியும் இருக்கின்றதோ யார் நமக்கு உதவி செய்கின்றார்களோ
அல்லது உதவும் தகுதியில் இருகின்றர்களோ அவர்களுக்கு நாம் நாமாக
முந்திக்கொண்டு ஸலாம் சொல்கின்றோம் மதிக்கின்றோம் பிரியத்தை வெளிப்படுத்துகிறோம்
அந்த செல்வாக்கு பெற்ற நபர் அல்லாஹ்வுக்கு விருப்பமான வாழ்கையை வாழ்பவரா அல்லது விரோதமான வாழ்கையை வாழ்பவரா?
என்று நாம் பார்பதில்லை இந்த பிரியம்
தவறானதாகும் . உண்மையான அல்லாஹ்வின் பிரியம் என்ன
வென்றால் எந்த மனிதர் நல்ல காரியம் செய்கின்றாரோ நல்லவராக வாழ்கின்றாரோ அவர் வசதி குறைந்தவராக
இருந்தாலும் உலகியல் ரீதியான உதவி செய்யமுடியாதவர்களாக இருந்தாலும் நாம்
அவரை அல்லாஹ்வுக்காக நேசிக்கவேண்டும்.
அவருடைய தொடர்பையும் பெற வேண்டும். இதேபோன்று யார்
அல்லாஹ்வுக்கு எதிராக வாழ்க்கையை வாழ்கிறாரோ நம்மை வாழ
சொல்கின்றாரோ அவர் பலசாலியாக பழகியவராக
இருந்தாலும் பலன் உடையவராக இருந்தாலும் நாம் அவரை இறைவனுக்காக எதிர்க்க வேண்டும்,
வெறுக்க வேண்டும்.
وأخرج ابن أبي شيبة وعبدالله بن أحمد
في زوائد المسند عن أبي مسلم رضي الله عنه قال : لقيت معاذ بن جبل رضي الله عنه
بحمص فقلت : والله إني لأحبك لله .
قال : أبشر فإني سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول « المتحابون في الله في ظل العرش يوم لا ظل إلا ظله يغبطهم
بمكانهم النبيون والشهداء ، ثم خرجت فلقيت عبادة بن الصامت رضي الله عنه فحدثته
بالذي قال معاذ ، فقال عبادة رضي الله عنه : سمعت رسول الله صلى الله عليه وسلم
يروي عن ربه عز وجل أنه قال : حقت محبتي للمتحابين فيّ ، وحقت محبتي للمتزاورين
فيّ ، وحقت محبتي للمتباذلين فيّ ، على منابر من نور يغبطهم النبيون والصديقون » .
அபூமுஸ்லிம்
(ரஹ்) சொல்கிறார்கள்.
நான் ஹிமஸ் என்ற பகுதியில் முஆது இப்னு
ஜபல் (ரலி) அவர்களை
சந்தித்து நான் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்று
சொன்னேன். அப்பொழுது அவர்கள் என்னிடம்
சுபச் செய்தி பெறுங்கள் ஏனெனில் நாயகம் சொன்ன ஹதீஸை நான் கேட்டு இருகின்றேன். யார்
அல்லாஹ்விற்காக பிரியப்பட்டார்களோ மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில்
இருப்பார். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை கண்டு நபிமார்களும்
போரில் தன்னுயிர் நீத்த ஸுஹதாக்களும் ரோஷப்படுவர்கள்.
அபூமுஸ்லிம் (ரஹ்) சொல்கின்றார் இதற்கு பின் நான் அங்கிருந்து புறப்பட்டேன் உபாதாபின்
சாமித்(ரலி) அவர்களை சந்தித்து முஆது எனக்கு சொன்ன ஹதீஸை அவரிடம் அறிவித்தேன்
அப்போது உபாதா ஹதிஸ் குத்சியை எனக்கு அறிவித்தார். அல்லாஹ் சொல்கின்றான் .
எனக்காக
வேண்டி பிரியப்படுபவர்கள் எனக்காக
சந்தித்து கொள்பவர்கள் எனக்காக தங்களுக்கு இடையில் செலவு செய்பவர்கள் இவர்களுக்கு என்று
அன்பு உறுதியாகி விட்டது இப்படிப்பட்டவர்கள் மறுமையில் ஒலி நிரம்பிய
மேடையில் வீற்றிருப்பார்கள் இவர்களை கண்டு நபிமார்கள் சித்தீகீன்கள்
ரோஷப்படுவர்கள். .
நூல் : தப்ஸீர் துர்ருல் மன்ஸூர்.
அல்லாவிற்காக வெறுத்த அருமை
தோழர்கள் .
நபி தோழர்கள் அவர்கள் யாரை
வெறுக்கிறார்களோ அவர்களை கடுகு அளவு கூட தங்கள் சுய நலத்திற்காக இல்லாமல்
அல்லாஹ்விற்காக வெறுத்தார்கள்
أخرج أبو يعلى والطبراني وابن مردويه وابن
عساكر عن أبي عثمان النهدي قال : إن سعد بن أبي وقاص قال : نزلت هذه الآية { وإن جاهداك
على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفاً } كنت رجلاً
براً بأمي ، فلما أسلمت قالت : يا سعد وما هذا الذي أراك قد أحدَثْتَ؟ لتَدَعَنَّ دينَك
هذا أو لا آكل ولا أشرب حتى أموت فَتُعَيَّرَ بي ، فيُقال يا قاتل أمه قلت : يا أمه
لا تفعلي فإني لا أدع ديني هذا لشيء ، فمكثت يوماً وليلة لا تأكل ، فاصبحت قد جهدت
، فمكثت يوماً آخر وليلة وقد اشتد جهدها ، فلما رأيت ذلك قلت : يا أمه تعلمين والله
لو كانت لك مائة نفس فخرجت نفساً نفساً ما تركت ديني هذا لشيء ، فإن شئت فكلي وإن شئت
فلا تأكلي ، فلما رأت ذلك أكلت . فنزلت هذه الآية .
சஹ்து
பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்
சொல்கிறார்கள் நான் என் தாயிக்கு உபகாரமும் பணிவிடையும் செய்யக் கூடியவராக இருந்தேன் இந்த நிலையில் நான் இஸ்லாத்தை ஏற்றேன். காபிரான
என் தாய் என்னிடம் சொன்னார்கள் நீ இஸ்லாத்தை விட்டும்
வெளியேற வேண்டும் அவ்வாறு நீ செய்யா நான்
எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் இருந்தே மரணித்து
விடுவேன் அவ்வாறு நடந்து விட்டால் மக்கள் உன்னை தாயை கொன்றவனே என்று குறை கூறுவார்கள் என்று
சொன்னார்கள் பிறகு ஒன்று இரண்டு நாட்கள். தான் சொன்னபடியே எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்கள். அப்போது நான் என்
தாயிடம் உனக்கு உனக்கு 100 உயிர்கள் இருந்து அந்த நூறும்
அடுத்து அடுத்து உன்னை விட்டும்
வெளியேறினாலும் நான் னது இந்த மார்க்கத்தை விட மாட்டேன் எனவே நீ விரும்பினால் சாப்பிடு அல்லது
சாப்பிடாமல் இரு எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று உறுதிப்பட சொன்னார்கள்
.அவர்களின் இந்த உறுதியை கண்ட தாயார் இதற்க்கு பின் சாப்பிட ஆரம்பித்தார்கள்
இப்போது தான் என்ற வசனம் இறங்கியது,
நூல் . தப்ஸீர் குர்துபி.
عن عائشة في حديث الإفك قالت: ثم ركبت وأخذ صفوان بالزمام
فمررنا بملأ من المنافقين، وكانت عادتهم أن ينزلوا منتبذين من الناس، فقال عبد الله
بن أبي، رئيسهم: من هذه؟ قالوا: عائشة قال: والله ما نجت منه وما نجا منها، وقال: امرأة
نبيكم باتت مع رجل حتى أصبحت ثم جاء يقود بها
عن عائشة، قالت: لما نزل هذا، يعني قوله:( إِنَّ الَّذِينَ
جَاءُوا بِالإفْكِ عُصْبَةٌ مِنْكُمْ ) في عائشة، وفيمن قال لها ما قال قال أبو بكر،
وكان ينفق على مسطح لقرابته وحاجته: والله لا أنفق على مسطح شيئا أبدا، ولا أنفعه بنفع
أبدا بعد الذي قال لعائشة ما قال، وأدخل عليها
ما أدخل، قالت: فأنزل الله في ذلك( وَلا يَأْتَلِ أُولُو
الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ )... الآية. قالت: فقال أبو بكر: والله إني لأحب أن
يغفر الله لي، فرجَّع إلى مسطح نفقته التي كان يُنْفِق عليه، وقال: والله لا أنزعها
منه أبدا.
அல்லாவுக்காக
நேசித்த அண்ணலின் அருமை தோழர்கள்
நபியுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் சென்ற ஒரு போரில் யுத்தம் முடித்து மதீனாவுக்கு திரும்பியபோது
பயணத்தின் இடையில் இரவில் ஒரு இடத்தில் தங்கிய நேரத்தில் இயற்கை உபாதையை ஆயிஷா
(ரலி) அவர்கள் நிறைவேற்ற போன இடத்தில் அவர்களின் முத்துமாலை காணமல் போனது
அதை
தேடி அவர்கள் சென்ற நேரத்தில்
தவறுதலாக பயண கூட்டத்தார் ஆயிஷா (ரலி) அவர்களை விட்டு விட்டு சென்று விட்டார்கள் மறுநாள் காலையில்
வழமையாக இடையில் விட்டு சென்ற பொருட்களை எடுத்து வருவதற்காக நபியால்
நியமிக்கப் பட்டிருந்த சப்வான் பின் முஅத்தல்(ரலி) என்ற தோழர் அங்கு வந்தார். அவர் ஒட்டகத்தில் ஆயிஷா (ரலி)
அவர்கள் ஏறி அமர்ந்து கொண்டார்கள் அவர்
ஒட்டகத்தை இழுத்து வந்தார் இருவரும் எந்த வார்த்தையையும் பேசாத
நிலையில் மிகவும் கண்ணியத்துடன் மதீனா வந்து சேர்ந்தனர்.
நயவஞ்சகர்கள் இந்த
சம்பவத்தை பயன்படுத்தி அவ்விருவருக்கும்
இடையில் அவதூரு பரப்பினார்கள் இந்த காரியத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராகவும்
அவர்களின் உதவிய கொண்டு வாழ்பவராகவும் இருந்த மிஸ்தஹ் (ரலி) என்பவரும்
சேர்ந்து கொண்டார் சுமார் ஒரு மாதம் கழித்துதான் அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்கள்
பரிசுத்தமான பத்தினி பெண் என்பதை உலகிற்கு பறை சாற்ற சூரத்துன் நூரில் -
10 வசனங்கள் இறக்கினான்
அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் விஷயமாக கீழ் வரும் வசனம்
இறங்கியது
செல்வந்தராகவும் வசதி உடையவராகவும் இருந்த அபூபக்கர்
(ரலி) அவர்கள் தனது தாயின் சகோதரி மகனாகவும் பத்ரில்
கலந்து கொண்ட முஹாஜிராகவும்
மிஸ்கீனாகவும் இருந்த மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு இனிமேல் எந்த செலவும் செய்ய மாட்டேன் என்று
சத்தியம் செய்தார். அபூபக்கர் (ரலி) போன்றோர் இவ்வாறு சத்தியம் செய்யக்கூடாது நீங்கள் அல்லாஹ்வின்
மன்னிப்பை பெற விரும்ப மாட்டீர்களா? என்ற வசனத்தை அபூபக்கருக்கு நாயகம் (ஸல்) ஓதி காட்டிய
வேலையில் தன் உள்ளத்தில் இருந்த கடும் கோபத்தையே மறந்து அல்லாஹ் என்னை மன்னிப்பதை நான்
பிரியப்படுகிறேன் என்று சொன்னதோடு மீண்டும் மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு செலவு
செய்ய முடிவு செய்து இனிமேல் எந்த காலத்திலும் அவருக்கு உதவுவதில்
இருந்து விலகமாட்டேன் என்று கூறினார்கள்.
நூல். தப்ஸீர். தபரீ
தன்மகன் ஆயிஷாவின்
கண்ணியத்தை சீர்குலைக்கும் காரியத்தில்
ஈடுபட்டு தன் குடும்பத்தின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய மிஸ்தஹ் (ரலி) அவர்கள்
அபூபக்கர் மன்னித்தார்களே இதுதான் அல்லாஹ்விற்காக பிரியப்படுவதாகும் .
அல்லாஹ்விற்காக வெறுப்பதில் அண்ணலாரின் அழகிய முன்மாதிரி
وعن عائشة
قالت : اعتل بعير لصفية وعند زينب
فضل ظهر فقال رسول الله صلى الله عليه وسلم لزينب : " أعطيها بعيرا " . فقالت
: أنا أعطي تلك اليهودية ؟ فغضب رسول الله صلى الله عليه وسلم فهجرها ذا الحجة والمحرم
وبعض صفر . رواه أبو داود
நபியின்
துணைவியார் ஸபிய்யா (ரலி) அவர்களின்
ஒட்டகம் நோய் வாய்பட்டது. அப்போது அன்னை ஜைனப் (ரலி) அவர்களிடம் அவர்களின் தேவைக்கு போக மேல்
மிச்சமான ஒட்டகம் இருந்தது. நாயகம் ஜைனபிடம் உன்னிடம் அதிகப்படியாக
உள்ள ஒட்டகத்தை சபிய்யாவிடம் கொடு என்று கூறியபோது ஜைனப் சொன்னார்கள் நான்
எனது ஒட்டகத்தை அந்த யூத பெண்ணுக்கு கொடுக்கமாட்டேன் என்று
கூறிவிட்டார்கள். ( சபிய்யா (ரலி) அவர்களின் முன்னோர் யூதர்கலாக இருந்தனர்) அல்லாஹ்
விரும்பாத இந்த வார்த்தையால் ஜைனப்பின் மீது கோபம் கொண்ட நாயகம் (ஸல்)
துல்ஹஜ் முஹர்ரம் ஸபரில் பாதி சுமார் இரண்டரை மாதம் ஜைனப் (ரலி) அவர்களின்
தொடர்பில் இருந்து விலகிகொண்டர்கள்.
(நூல் : மிஸ்காத். 5049.
இறை வணக்கமும் இறைவனுக்காக
அன்பும்.
ويروى أن الله تعالى أوحى إلى عيسى عليه
السلام: " لو أنك عبدتني بعبادة أهل السموات والأرض وحب في الله ليس وبغض في الله
ليس ما أغنى عنك ذلك شيئاً "
ஈஷா
நபிக்கு வஹி
அறிவித்தபோது அல்லாஹ் சொன்னான். அல்லாஹுவுக்காக
பிரியப்படுதல் அவனுக்காக கோபம் கொள்ளுதல்
இந்த தன்மை உங்களிடம் இல்லாத நிலையில் நீங்கள் வானிலும் பூமியிலும் உள்ள அனைவரின்
வணக்கத்தை கொண்டு என்னை வணங்கினாலும் அந்த வணக்கம் உங்களை விட்டும் எதையும்
தேவை அற்று வைக்காது அது உங்களுக்கு எந்த பயனையும் தராது'
என்று அல்லாஹ் சொன்னான்.
நூல். இஹ்யா
மனிதர்களை
நேசிப்பதாலோ அல்லது வெறுப்பதாலோ நமக்கு
ஏற்படும் லாப நஷ்டத்தை கவனத்தில் கொள்ளாமல் அல்லாஹ்வுடன் நமக்கு உள்ள தொடர்பை வலுப்படுத்தும்
மனிதர்களையும் செயல்களையும் மட்டுமே கவனத்தில் கொண்டு நமது நட்பை அமைத்து
கொள்ள வேண்டும
அல்ஹம்து லில்லாஹ் நல்ல வரிகள் அருபுதம்
ReplyDeleteMasha allah
ReplyDeleteAlhamdulillah surukkamana arumayana korvai
ReplyDelete