சூனியமும்
அல்லாஹ்வின் நாட்டமும்.
சூனியத்தினால்
பாதிப்பு ஏற்படும். ஆனால் அல்லாஹ்வின் நாட்டமும், அனுமதியும்
இருந்தால் தான் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது'
وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا
كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ
السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا
تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ
وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ
اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ
أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ
சுலைமான்
நபியின் ஆட்சி காலத்தில் ஷைத்தான்கள் ஓதியதை அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால்
சுலைமான் நபி (ஒரு போதும்) இறை நிராகரிப்பாளராக ஆகவில்லை. என்றாலும் ஷைத்தான்கள் (தான்) இறை
நிராகரிப்பாளராக ஆனார்கள். (ஏனெனில்) அவர்கள் மக்களுக்கு சூனியத்தை கற்றுக்
கொடுத்தார்கள். மேலும்
பாபில் என்ற ஊரில் ஹாரூத் மாரூத் என்ற
இரு
மலக்குகளுக்கு இறக்கப்பட்ட சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆனால் அவ்விரு
(வான) வரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் ( இதைக் கற்று ) நீங்கள் இறை நிராகரிக்கும்
காபிர்களாக ஆகிவிடாதீர்கள் என்று (எச்சரித்து ) சொல்லாமல் யாருக்கும் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை
ஆயினும் கணவன், மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்குமே அத்தகைய (சூனித்)தை அவ்விரு (வான)
வரிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்டார்கள் எனினும் அல்லாஹ்வின் அனுமதின்றி அவர்கள்
யாருக்கும் இதன் மூலம் தீங்கு இழைக்க முடியாது. மேலும் அவர்கள் தங்களுக்கு
தீங்கிளைப்பதையும் தங்களுக்கு பலனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள் இதை
சூனியத்தை) விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை
என்பதை நிச்சயமாக அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எந்த ஒன்றுக்குப் பகரமாக தங்களின் ஆத்மாக்களை
விற்றார்களோ அது கெட்டதாகும் (இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா ?
அல்குர் ஆன் : 2/102
أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ
اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ سُمٌّ وَلَا سِحْرٌ
ذَلِكَ الْيَوْمَ إِلَى اللَّيْلِ وَقَالَ غَيْرُهُ سَبْعَ تَمَرَاتٍ
யார் ஒவ்வொரு
நாளும் அதிகாலையில் (வெறும் வயிற்றில் ) அஜ்வா பேரித்தம் பழங்களை
சாப்பிடுகிறார்களோ அன்றைய தினத்தில் இரவு வரை விஷம் மற்றும் சூனியம் அவரை
பாதிக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் :
ஸஅது (ரலி) நூல் : புகாரி :5768
قَالَ سَمِعْتُ عَامِرَ بْنَ سَعْدٍ سَمِعْتُ سَعْدًا رَضِيَ
اللَّهُ عَنْهُ يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ ذَلِكَ
الْيَوْمَ سُمٌّ وَلَا سِحْرٌ
யார்
அதிகாலையில் ஏழு அஜ்வா பேரித்தம் பழங்களை
சாப்பிடுகிறார்களோ அன்றைய தினத்தில் விஷம் மற்றும் சூனியம் அவரை பாதிக்காது என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : ஸஅது
(ரலி) நூல் : புகாரி :5769
சூனியம் செய்வது
பெரும் பாவங்களில் கட்டுப்பட்டதாகும்
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا
يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ
النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ
مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ
الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
அழிக்கக் கூடிய
ஏழு பெரும் பாவங்களை தவிர்த்து கொள்ளுங்கள் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே அவை என்ன? என்று தோழர்கள்
கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இணை
கற்பித்தல் சூனியம் செய்தல் நியாயமின்றி எந்த உயிரை கொள்வதை ஹராமாக்கினானோ அத்தகைய
உயிரை கொள்வது வட்டி உண்பது அனாதையின் செல்வத்தை உண்பது யுத்த நாளில்
புறமுதுகிட்டு ஓடுவது அப்பாவிகளான இறை நம்பிகையுள்ள கற்புள்ள பெண்கள் மீது
அவதூறு கூறுவது என்று கூறினார்கள்
அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி : 2766
நபி (ஸல்) அவர்களுக்கு
சூனியம் வைக்கப்பட்டது.
عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ
حَتَّى كَانَ يَرَى أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلَا يَأْتِيهِنَّ قَالَ
سُفْيَانُ وَهَذَا أَشَدُّ مَا يَكُونُ مِنْ السِّحْرِ إِذَا كَانَ كَذَا فَقَالَ
يَا عَائِشَةُ أَعَلِمْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ
فِيهِ أَتَانِي رَجُلَانِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ
رِجْلَيَّ فَقَالَ الَّذِي عِنْدَ رَأْسِي لِلْآخَرِ مَا بَالُ الرَّجُلِ قَالَ
مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي
زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ كَانَ مُنَافِقًا قَالَ وَفِيمَ قَالَ فِي مُشْطٍ
وَمُشَاقَةٍ قَالَ وَأَيْنَ قَالَ فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ تَحْتَ رَاعُوفَةٍ فِي
بِئْرِ ذَرْوَانَ قَالَتْ فَأَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْبِئْرَ حَتَّى اسْتَخْرَجَهُ فَقَالَ هَذِهِ الْبِئْرُ الَّتِي أُرِيتُهَا
وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ
الشَّيَاطِينِ قَالَ فَاسْتُخْرِجَ قَالَتْ فَقُلْتُ أَفَلَا أَيْ تَنَشَّرْتَ
فَقَالَ أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي وَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى أَحَدٍ
مِنْ النَّاسِ شَرًّا
ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ
சுரைக் குடும்பத்தைச்
சார்ந்த ஒருவன் சூனியம் செய்தான் அவனுக்கு லபீத் இப்னு அஃஸம் என்று பெயர்
கூறப்படும் எனவே நபி (ஸல்) அவர்கள் ஒரு
காரியத்தை செய்யாமல் அதைச் செய்ததாக அவர்களுக்கு எண்ணம் ஏற்படுத்தப்படும் ஒரு நாள்
பகலில் அல்லது இரவில் என்னிடம் தங்கி இருந்தார்கள் ஆனால் நபி (ஸல்) அவர்கள் (தனக்கு)
ஏற்பட்டிருக்கும் நிலை என்ன ?முழுமையாக குணமடைவதர்காகவும் இறைவனிடம் துஆ செய்தார்கள் மேலும்
துஆ செய்தார்கள் பின்பு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே நான்
அல்லாஹ்விடத்தில் எது விஷயமாக தெளிவு கிடைக்கும் படி கேட்டுக்கொண்டிருந்தேனோ அது
விஷயமாக அல்லாஹ்
எனக்கு தெளிவு கொடுத்துவிட்டான்.
(என் கனவில்) இரண்டு மனிதர்கள் (மலகுகள்) என்னிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவர்
என் தலைகருகில் அமர்ந்தார்.
இன்னொருவர் என் கால்களுக்கருகில் அமர்ந்தார். இந்த
மனிதருக்கு (நபி - ஸல் - அவர்களுக்கு) என்ன வேதனை ஏற்பட்டுள்ளது? என்று
அவ்விருவரில் ஒருவர் தன் தோழரிடம் கேட்டார். அதற்கு இரண்டாவது நபர் : இவர்கள்
சூனியம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறினார். உடனே முதலாமவர் : இவர்களுக்கு யார் சூனியம்
செய்தார்? என்று கேட்டார். அதற்கு இரண்டாமவர் : லபீத் இப்னு அஃஸம் என்பவன் சூனியம் செய்துள்ளான் என்றார். எந்த பொருளில்
சூனியம் செய்துள்ளான் என்று முதலாமவர் கேட்டார். அதற்கு
இரண்டாமவர் : சீப்பிலும், உதிந்த முடியிலும், ஆண் பேரீத்த மரப்பாளையின் உறையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று
கூறினார்.
அந்த பொருள் எங்கே இருக்கிறது என்று முதலாமவர் கேட்டார். அதற்கு
இரண்டாமவர் : தர்வான் என்ற கிணற்றில் அப்பொருள் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் சில தோழர்களுடன் அந்த
கிணற்றிற்கு சென்றார்கள் . பின்பு வந்து, ஆயிஷாவே!
அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றை போல் உள்ளது, அல்லது அதன்
பேரீத்த மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளை போல உள்ளன என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அப்பொருளை நீங்கள் (மக்களுக்கு முன்னிலையில்)
வெளியேற்ற வேண்டாமா? என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ; அல்லாஹ் எனக்கு ஆரோக்கியத்தை தந்து விட்டான். மேலும் மக்களிடம் தீங்கை
பரப்புவதை நான் வெறுக்கின்றேன் என்று கூறினார்கள். பின்பு அந்த கிணற்றை மூடும்படி
உத்தரவிட்டார்கள். எனவே அக்கிணறு மூடப்பட்டது.
அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரளி), நூல் : புகாரி 5763
மேற்படி ஹதீஸில்
" நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்யாமல் அதை செய்ததாக அவர்களுக்கு
எண்ணம் ஏற்படுத்தப்படும்" என்று வருகிறது.
அது என்ன
காரியம் என்பது 5765 ல் பின் வருமாறு விளக்கமாக வருகிறது.
"நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களிடம்
செல்லாமல் அவர்களிடம் சென்றதாக கருதுவார்கள்" என்று 5765 ல் விளக்கமாக வந்துள்ளது.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ
سَحَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ
الْيَهُودِ فَاشْتَكَى لِذَلِكَ أَيَّامًا فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام
فَقَالَ إِنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ سَحَرَكَ عَقَدَ لَكَ عُقَدًا فِي بِئْرِ
كَذَا وَكَذَا فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَاسْتَخْرَجُوهَا فَجِيءَ بِهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَمَا ذَكَرَ ذَلِكَ لِذَلِكَ
الْيَهُودِيِّ وَلَا رَآهُ فِي وَجْهِهِ قَطُّ
யூத இனத்தை சேர்ந்த ஒருவன் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்தான் . அதனால்
பல நாட்கள் நபி (ஸல்) அவர்கள் நோயில் அவதிப்பட்டாகள். எனவே ஜிப்ரில் (அலை) அவர்கள்
நபி (ஸல்) அவர்களிடம் வந்து,
யூத இனத்தை
சேர்ந்த ஒருவன் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டான. இன்ன கிணற்றில் இன்ன இன்ன
பொருளில் உங்களுக்கு முடிச்சிட்டு வைத்துள்ளான் என்று கூறினார்கள். உடனே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்கிணற்றிற்கு ) ஆள் அனுப்பினர்கள். அவர்கள் அப்பொருளை வெளியே
எடுத்தார்கள். பின்பு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. பின்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கயிற்றிலிருந்து
அவிழ்கப்பட்டதை போன்று (உற்சாகமாக) ஆகிவிட்டார்கள். அதை அந்த யூதனிடம் நபி (ஸல்) அவர்கள்
கூறவில்லை. நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கூட அதை அவன் பார்கவில்லை.
அறிவிப்பாளர் : சைது இப்னு அர்க்கம் (ரளி) , நூல் : நசாயி 4012
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2)
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
(4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5)
அதிகாலையில்
இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (நபியே) நீங்கள் கூறுகள் அவன்
படைத்தவற்றின் தீங்கை விட்டும் இன்னும் இருள் பரவும் போது ஏற்படும்
இரவின் தீங்கை விட்டும் பொறாமைக்காரன்
பொறாமை கொள்ளும் போது உண்டாகும் தீங்கை விட்டும் (பாது காவல் தேடுகிறேன் என்று
கூறுங்கள்)
அல்குர் ஆன்
عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ
أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ فَقَالَ نَعَمْ قَالَ بِاسْمِ
اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ
عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
(ஒரு தடவை) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து முஹம்மது (ஸல்) அவர்களே
நீங்கள் நோயில் அவதிப்படுகிறீர்களா ? என்று
கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறினார்கள் உங்களுக்கு நோவினைத்
தரக்கூடிய எல்லா பொருட்களை விட்டும் எல்லா உயிரினங்களின் தீங்கை விட்டும் அல்லது
பொறாமைக்காரனின் கண் திருஷ்டிய விட்டும் அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு
உங்களுக்கு ஓதிப் பார்க்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு குணமளிப்பானாக அல்லாஹ்வின்
திருப் பெயரைக் கொண்டு உங்களுக்கு ஓதிப் பார்க்கிறேன் என்று
ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் (ரலி) நூல்
முஸ்லிம் 4056
சூனியத்திலிருந்து
பாதுகாக்கும் துஆ.
عن القعقاع : أن كعب الأحبار قال : لولا كلمات أقولهن لجعلتني يهود
حمارا فقيل له : ما هن ؟ قال : أعوذ بوجه الله العظيم الذي ليس شيء أعظم منه
وبكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى ما علمت
منها وما لم أعلم من شر ما خلق وذرأ وبرأ . رواه مالك
கஹ்புல் அஹ்பார்
(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் (இவர்கள் யூத பாதிரியாக இருந்து உமர் (ரலி) ஆட்சி காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ) நான் வழமையாக சில வார்த்தைகளை
ஓதி வருகின்றேன் நான் அந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்திருந்தால் யூதர்கள் என்னை
தங்கள் சூனியத்தைக் கொண்டு கழுதையாக ஆக்கி இருப்பார்கள் அப்போது அவர்களிடம் அந்த
வார்த்தைகள் என்ன என்று கேட்ட போது மேல் கண்ட துஆ வை சொன்னார்கள்
நூல் : முவத்தா
இமாம் மாலிக்.
وترقد عقد فيه احدى عشرة عقدة مغرزة بالابر فجاؤا بها النبى عليه
السلام فجعل يقرأ المعوذتين عليها فكان كلما قرأ آية انحلت عقدة ووجد عليه السلام
خفة حتى انحلت العقدة الاخيرة عند تمام السورتين فقام عليه السلام كأنما انشط من
عقال
இமாம் முகாதில் இமாம் கலபீ ( ரஹ்) இருவரும்
சொல்கின்றார்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட பொருளில் ஒரு கயிறு
இருந்தது அதில் 11 முடிச்சுகள் போடப்பட்டிருந்தது அப்போது அல்லாஹ் இந்த இரு சூராக்களை
(சூரத்துன் பலக், வன் நாஸ்) இறக்கினான் பலகில் 5 வசனங்களும் நாஸில் 6 வசனங்களும் இருக்கிறது அதனுடைய ஒவ்வொரு
வசனமும் நபியால் ஓதப்பட்ட போது ஒவ்வொரு முடிச்சாக
அவிழ்ந்து தொடர்ந்து எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்தது பிறகு நபி (ஸல்) அவர்கள்
உற்சாகத்துடன் எழுந்தார்கள்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எந்த வீட்டில்
ஆயத்துல் குர்ஸி ஓதப்படுகிறதோ அந்த வீட்டிலிருந்து 30 நாட்கள்
ஷைத்தான் ஒதுங்கி கொள்கின்றான் 40
நாட்கள் சூனியம்
செய்யும் ஆணோ பெண்ணோ அந்த வீட்டில் நுழைய முடிவதில்லை
நூல் ( மபாதீஹூல் ஹைப்)
மேல் கூறப்பட்ட
திருக்குர்ஆன் வசனங்களும் திருநபியின் பொன்மொழிகளும் அவ்விரண்டுக்கும் விளக்கம்
சொல்லக் கூடிய உலகத்தின் எல்லா விரிவுரையாளர்களின் ஆய்வுகளும் சூனியம் உண்டு
என்பதை தெளிவு படுத்துகிறது எனவே சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை உடைய நாம் சூனியம்
இருக்கிறது என்பதையும் அந்த சூனியம் இறைவனின் நாட்டம் இன்றி கடுகளவும் கூட எந்த
தீங்கையும் எந்த காலத்திலும் யாருக்கும் ஏற்படுத்த முடியாது என்பதையும் அறிந்து
கொள்வோம் தங்களுடைய சுய நலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் நாற்றமெடுக்கும்
தங்களுடைய கொள்கையை நிலை நாட்டுவதற்காகவும் குர்ஆன் மெய்யாக்கிய சூனியத்தை
பொய்யாக்கும் போலி தவ்ஹீத்வாதிகளின் வேஷத்தை தெரிந்து கொள்வோம் அவர்களின் நாசத்தை
விட்டும் தவிர்ந்து கொள்வோம்
جزاك الله خيرا كثيرا
ReplyDeleteAlhamdulila
ReplyDeletePj vai alla unmai muslimaha akkuvanaha.
சூனியம் என்றால் என்ன என்பதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே?
ReplyDelete